டில்லி : கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும், தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கல் தினசரி உக்கிரம் அடைந்து வருகிறது. பல நகரில் தினசரி வெப்பநிலையே 100 டிகிரியை தாண்டி காணப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலை தான். இதனால் பொது மக்கள் கவனமாக இருக்கும் படி இந்திய வானிலை மையமும், அரசு துறைகளும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

இந்நிலையில் இன்றும் நாளையும் நாடு முழுவதும் கடும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதோடு மேற்கு வங்கம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது. மக்கள் அதிகமான தண்ணீர் அருந்த வேண்டும் என்றும், பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களி அடுத்த 4 நாட்களுக்கு 109 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்றும், மற்ற மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}