டெல்லி: டெல்லியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பகலில் கூட வாகனங்களை கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வட இந்தியா முழுவதும் பரவலாக பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடும்பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள பனிக்கட்டிகள் அதிகளவில் உருகி வருவதினால், இதன் தாக்கம் டெல்லியில் எதிரொலித்துள்ளது. அத்துடன் பனிபொழிவுடன் காற்றும் அதிகமாக இருப்பதினால் குளிரின் தாக்கம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இந்தாண்டு உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக இருப்பதினால், மக்கள் பனியை தாங்க முடியாமல் ஆங்காங்கே நெருப்பை மூட்டி குளிரை தனித்து வருகின்றனர். இந்த பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரயில் மற்றும் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ள பயணிகள் மிகவும் பாதிப்புக்களாகி வருகின்றனர்.
இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வட இந்தியாவில் பல மாநிலங்களில் கடுமையாகன பனிபொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நேற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து இன்றும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக நகரின் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி என்ற அளவில் இருக்கிறது. குறைந்த பட்ச வெப்பநிலையாக 8 டிகிரி முதல் 7 டிகிரியாகவும், அதற்கும் கீழும் செல்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!
மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்
தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்
அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு
'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்
தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?
கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்
{{comments.comment}}