சென்னை: சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் அதிக கன மழை காரணமாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வேளச்சேரி பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது வாகனங்களை அங்குள்ள பாலத்தின் மீது ஓரமாக பார்க் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை அதிகரிக்கும் எனவும், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அடுத்த மூன்று நாட்கள் கனமழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது. இதனையடுத்து உடனடியாக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
ஏனெனில் கடந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்ததால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல இடங்கள் பாதிக்கப்பட்டது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 15 முதல் 18ஆம் தேதி வரை ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் . மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவை எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டும். மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் உடனே மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும். தங்கு தடையின்றி ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் வினியோகத்தை மேற்கொள்ள வேண்டும். வெள்ளத்தால் பாதிக்க கூடிய இடங்களில் இன்றே மீட்பு படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும். நிவாரண முகங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும். கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதல் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மீட்புப் பணிக்கு தேவையான ஜேசிபி மற்றும் நீர் இறைப்பான்கள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். மின் உற்பத்தி சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவு அத்தியாவசிய பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள 1070 எண் முலம் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை பொருத்தவரை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவசர கட்டுப்பாட்டு வாட்ஸ்அப் எண் 9445869843 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். இது தவிர மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாட்டின் மையத்தின் தொடர்பு எண்ணானது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் இணையதளம் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் பொதுமக்கள் தாழ்வான இடங்களில் வசித்தால் முன்கூட்டியே நிவாரண முகாம்களில் சென்று தங்க வேண்டும். கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்கள், நீர்நிலை தளங்களுக்கு செல்ல வேண்டாம். கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியோர்கள், தேவையான உதவிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின் படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் மு க ஸ்டாலின் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களும் உஷாராகிறார்கள்
.jpg)
மறுபக்கம் பொதுமக்களும் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விட்டனர். தாழ்வான பகுதிகளில் வசிப்போர், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர் தக்க முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி பகுதி பெரு வெள்ளம் வந்தால் தாங்காது. அந்த ஊரே வெள்ளத்தில் மிதக்கும். கடந்தகாலங்களில் ஏற்பட்ட வெள்ள அனுபவங்களை மனதில் கொண்டு அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். குறிப்பாக வேளச்சேரி, ராம் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது கார்களை, வேளச்சேரி மேம்பாலத்தில் ஓரமாக நிறுத்த ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}