கோவை: பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து , கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோடை மழை தற்போது தமிழகம் முழுவதிலும் பரவலாக பெய்து வருகிறது. இந்த கன மழை காரணமாக கோடைகாலமா? மழை காலமா? என்ற ஐய்யம் ஏற்படும் அளவிற்கு தற்போதைய கிளைமேட் உள்ளது. தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இந்த நீர் வரத்தால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது.

பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாக உள்ள நிலையில், தற்போது அதன் நீர்மட்டம் 94.5 அடியாக உயர்ந்துள்ளது. அதில் 40 அடி சேறும், சகதியுமாகவே இருக்கும். முன்னர் எல்லாம் பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்கு நீர் திறந்து விடப்படும். கோடை காலத்தில் வெயில் அதிகமாகி நீர் மட்டம் குறைந்ததினால் நீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருவதால், அணையின் நீர் மட்டம் மடமட வென உயர்ந்தது.
இதை அடுத்து பில்லூர் அணை திறக்கப்பட்டுள்ளது. அதுவும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து , தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற வெள்ள அபாய எச்சரிக்கை விடபப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தேக்கம்பட்டி, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினாம்பாளையம், சிறுமுகை ஆலங்கொம்பு பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}