கோவை: கோவை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதியில் திடீர் கனமழை பெய்தது. கன மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கன மழை காரணமாக அவினாசி சாலை சுரங்கப்பாதையில்தண்ணீர் சூழ்ந்ததால் சுரங்கப்பாதை மூடப்பட்டது.
கோவையில் நேற்று திடீர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கோவையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது இடி மின்னலுடன் கனமழை பெய்து வருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென மாலை நேரத்தில் சுமார் 3 மணி நேரம் பலத்த காற்று , இடியுடன் கனமழை பெய்தது.
இதனால் அவிநாசி சாலை, லங்கா கார்னர், கிக்கானிக் பள்ளி சுரங்க பாதைகள் நீரில் மூழ்கின. அங்கு போக்குவரத்து முற்றிலுமாக தூண்டிக்கப்பட்டது. இதனால் சுரங்கப் பாதையில் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தில் திருப்பி விடப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அவிநாசி சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. திருச்சி செல்லும் வாகனங்களும் செல்ல முடியவில்லை. மேலும், பள்ளி முடிந்து பேருந்திற்காக காத்திருந்த மாணவ, மாணவிகள் தண்ணீரிலேயே நீ்ண்ட நேரம் காத்திருந்தனர். கோவையில் பல்வேறு பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மழை நீருடன் கழிவு நீர் கலந்து சென்றதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 3 மணி நேரம் பெய்த கனமழைகே கோவையில் பல்வேறு பணிகள் ஸ்தம்பித்தன.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதிலும் பரவலாக மிதமான மற்றும் கனமழை பொழியும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}