சென்னை: தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமாக உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக கன மற்றும் மிக கன மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 10ம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடல் கர்நாடகா கோவா கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8:30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 13ஆம் தேதி காலை வாக்கில் மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இருக்கக்கூடும்.

12ம் தேதி மழை வாய்ப்பு
திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
13ஆம் தேதி
திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
14ஆம் தேதி
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னைக்கு மிக கன மழை எச்சரிக்கை
அக்டோபர் 15ம் தேதி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் ஒரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
16ஆம் தேதி
கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகள், நீலகிரி. ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
17ஆம் தேதி
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்
தலைநகர் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}