சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சியால், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. மேலும் காற்றின் திசையால் உருவான மேகக் கூட்டத்தின் காரணமாகவும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று மிக கனமழை மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை ,தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை ,விருதுநகர் , தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேபோல நாளையும் தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கும் நாளை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக மிதமான மற்றும் கன மழை பெய்து வருவதால் வடகிழக்குப் பருவ மழையின் பற்றாக்குறை விரைவில் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தமிழ்நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உபரி மழைப்பொழிவு கிடைத்துள்ளது. வட தமிழ்நாட்டில்தான் பற்றாக்குறை மழை தொடர்கிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}