திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் 100 மிமீ மேலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், வயநாட்டில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் கூட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.மேலும். சூலூரில் இருந்தும் 2 ஹெலிகாப்டர்கள் கொண்டுவரப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகியபகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு எற்பட்டுள்ளன. இந்த நிலசரிவில் சிக்கி 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்த 1000த்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் தொடரந்து கன மழை பெய்து வருவதால் ரயில் சேவையை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எர்ணாகுளம்-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் ஆலுவா இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-ஷோரனூர் இடையேயான வேணாடு எக்ஸ்பிரஸ் சாலக்குடியில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}