தென் சென்னையில் ஏன் திடீர்னு இவ்வளவு பெரிய மழை தெரியுமா

Nov 03, 2023,11:15 AM IST
சென்னை: சென்னை நகரில் காலையிலிருந்து திடீரென அதிக அளவில் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதால் மக்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர். 

இதற்குக் காரணம் சென்னை விமான நிலையம் - ஆலந்தூர்  -மடிப்பாக்கம் பகுதியில்  கூடிய மிகப் பெரிய அளவிலான மேகக் கூட்டம்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் இதுவரை பெரிய அளவிலான மழையை சென்னை எதிர்பார்க்கவில்லை.  ஆனால் இன்று காலை முதல் மழை விட்டு வெளுத்து வருகிறது. குறிப்பாக தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் சூப்பராக மழை பெய்து வருகிறது.



இந்த திடீர் கன மழைக்கு காரணம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், மடிப்பாக்கம், விமான நிலையம், ஆலந்தூர் பகுதிகளில் திறண்ட மிகப் பெரிய மேகக் கூட்டம்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். மிகப் பெரிய அளவில் மேகக் கூட்டம் திரண்ட காரணத்தால்தான் பெருமழை இந்தப் பகுதியில் கொட்டித் தீர்த்து விட்டது. 

விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கிண்டி, நங்கநல்லூர், தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து விட்டு விட்டு மழை கொட்டிக் கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்