தென் மாவட்டங்களை மிரட்டும்.. அதீத கன மழை.. மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு ரெட்!

Dec 18, 2023,08:46 AM IST

- மஞ்சுளா தேவி


நெல்லை: நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் இன்று மதுரை, விருதுநகர், தேனி ,ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.


தென் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தென்மேற்கு வங்கக் கடலில்  கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று முதல் தென் மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. 150 ஆண்டுகளில் இல்லாத அளவுகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு  உள்ளிட்ட அனைத்து ஆறுகளும் வெள்ளக்காடாகியுள்ளன. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகள் உள்ளிட்டவை நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது.




நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் 1992 நவம்பர் மாதம் ஒரே நாளில் 96.5 செமீ மழை பெய்ததுதான் அதிகபட்ச மழை அளவாக இருந்தது. அதை தற்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நெருங்கி விட்டது.  நேற்று காலை 6:00 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அதிகபட்சமாக அங்கு 93 செமீ  அதாவது 930 மில்லி மீட்டர் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் காயல்பட்டினம் நீரில் மிதக்கிறது.


ரெட் அலர்ட்:


நெல்லை மாவட்டத்தை தொடர்ந்து  தற்போது மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.


ஆரஞ்சு அலர்ட்


தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மிதமான மழை:


இதுதவிர ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ,புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்