- மஞ்சுளா தேவி
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அதிகபட்சமாக 17செமீ கனமழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல் பகுதிகளின் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியால், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது.
நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 17 செமீ மழை கொட்டி தீர்த்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 12.3 செமீ மழையும், கடலூரில் 12 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
பரங்கிப்பேட்டையில் 12 செமீ மழையும், வேதாரண்யம் மற்றும் திருத்துறைப்ப்பூண்டியில் தலா 11.2 செமீ மழையும், கோடியக்கரையில் 10.3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சிதம்பரத்தில் 10 செமீ மழையும், மயிலாடுதுறை, காட்டுமன்னார்கோவில், மதுராந்தகம், மற்றும் சீர்காழியில் தலா 9 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
7 இடகளில் மிக கன மழை.. 31 இடங்களில் கன மழை
இதுதொடர்பாக தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:
தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, 16ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட மேற்கு வங்கக் கடல், ஒடிஷா கடல் பகுதியில் நிலை பெறும். தற்போது தென் மேற்கு வங்கக் கடலில் மேலு்ம் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் 7 இடங்களில் மிக கன மழை பெய்துள்ளது. 31 இடங்களில் கன மழை பெய்துள்ளது.
அடுத்த 2 நாட்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன மழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டனம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன அல்லது மிக கன மழை பெய்யும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூ, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றார்.
கடல் சீற்றம்
கடல் சீற்றம் காணப்பட்டதால் செங்கல்பட்டு, கல்பாக்கம் ,மாமல்லபுரம் ,போன்ற பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இப்பகுதிகளில் கடல் அலைகள் 5 அடி வரை மேலே எழுகின்றன. இதன் காரணமாக மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் ஏராளமான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}