சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வட மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்று தெரிகிறது. இன்று இரவு பல மாவட்டங்களில் ஓரளவுக்கு கன மழை இருக்கக் கூடும். அதேசமயம் நாளையும் நாளை மறு நாளும் வட மாவட்டங்களில் மிக கன மழையை எதிர்பார்க்கலாம்.
நாளை இரவு முதல் 4ம் தேதி வரை இரு வட மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிக கன மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3ம் தேதி மழை
மிக கன மழை வாய்ப்பு - திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மாவட்டங்கள். இந்த மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.
கன மழை - வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்கள்.
4ம் தேதி மழை
மிக கன மழை - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு திருவண்ணாமலை மாவட்டங்கள்
கன மழை - புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்.
இதற்கிடையே, இன்று இரவு 1 மணிக்குள் 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}