சென்னை: தங்களுடைய பிரச்சனை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நடிகர் ரவி மோகன் -ஆர்த்தக்கு இடையில் விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சூழலில், ரவி மோகன் பாடகி கெனிஷா இருவரும் ஒரு திருமண நிழ்வில் ஜோடிாக கலந்து கொணடனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனால், ரவி மோகன் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக ரவி மோகனும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இப்படி கணவன் மனைவி இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஆர்த்தியின் தாயாரும் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிக்கைகளை வைத்து சமூக வலைத்தள பக்கங்களில் விவாதங்கள் நடந்து வந்தன. பலரும் பலவிதங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி ரவி மற்றும் அவரது தாயாருக்கு தடை விதிக்கக்கோரி நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு இன்று விசாரனைக்கு வந்த போது, இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தங்களுக்கு இடையிலான பிரச்சனை குறித்து பொது வெளியில் அவதூறு கருத்துகளை வெளியிட நடிகர் ரவி மோகனுக்கும் ஆர்த்தி ரவிக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இவர்கள் குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக ஊடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}