சென்னை: இந்தியா வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியுள்ள நிலையில், இந்த போட்டித் தொடரை எதிர்த்து இந்து மக்கள் கட்சி இன்று போராட்டம் நடத்தியது.
இந்தியா வங்கதேசம் இடையே இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. வங்கதேசம் கிரிக்கெட் அணி வீரர்கள் நஜ்முல் ஹுசைன் ஹன்டோ தலைமையில் வந்துள்ளனர். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று (19ஆம் தேதி) காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாடுகிறது.

ஆனால் இந்த கிரிக்கெட் தொடரை நடத்த இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வங்கதேசத்தில் பெரும் கலவரம் வெடித்தது. அந்த நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டது. மேலும் அங்கு நடந்த கலவரத்தில் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் வங்கதேச அணி இந்தியாவுக்கு வரக் கூடாது, இந்தத் தொடரை தடை செய்ய வேண்டும். மீறி விளையாடினால் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மகா சபை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் எச்சரித்துள்ளன.
சென்னையில் இந்து அமைப்புகள் பலமானவையாக இல்லை என்பதால் பிரச்சினை இல்லை. இருப்பினும் இந்து மக்கள் கட்சி சார்பில் சிலர் இன்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தினர். ஆனால் வட மாநிலங்களில் இந்தத் தொடர் தொடரும்போது அங்கு பெருமளவில் போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}