இப்ப இதுக்கு நாம என்ன சொல்றது.. நிலாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க கோரும் சாமியார்!

Aug 28, 2023,01:07 PM IST
டெல்லி: நிலாவை உடனடியாக இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று அகில இந்திய இந்து மகாசபா தேசியத் தலைவரான சாமியார் சக்ரபாணி மகராஜ் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கேலி கிண்டல்கள், விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நிலவின் தென் முனையில் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கியுள்ளது. இதன் மூலம் தென்முனைக்குப் போன முதல் நாடாக இந்தியா வரலாறு படைத்துள்ளது. 

இந்த நிலையில் ஒரு சாமியார், இந்த வெற்றியை நாம்  கொண்டாட வேண்டும். உடனடியாக நிலாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று கூறி அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

ஏற்கனவே நிலவில் லேண்டர் தரையிறங்கி பகுதிக்கு சிவசக்தி என்று பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டியிருப்பதற்கே பல்வேறு தரப்பிலிருந்தும் கலவையான ரியாக்ஷன்கள் வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் நிலாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று சொல்லி எகிற வைத்துள்ளார் ஒரு சாமியார்.

இதுகுறித்து சுவாமி சக்ரபாணி மகராஜ் ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில்,  இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து நிலாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும். மேலும் எந்தத் தீவிரவாதிகளும் நிலாவில் நுழைந்து விடாமலும் தடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இந்து சனாதன ராஷ்டிரா என்று நிலாவை அறிவித்து விட வேண்டும். சிவசக்தி பாயின்ட்டை தலைநகராக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் அந்த சாமியார்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்