லத்தூர், மகாராஷ்டிரா: எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை கடந்த 2 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமான அந்த சிறுமிக்கு கட்டாயப்படுத்தி கருவைக் கலைத்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேவாலயா என்ற அந்த காப்பகத்தின் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் சேவாலயா என்ற காப்பகம் உள்ளது. இங்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட சிறார்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் 16 வயதான சிறுமிக்கு மிகப் பெரிய கொடுமை அரங்கேறியுள்ளது.
காப்பகத்தில், தன்னை இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ஜூலை 13, 2023 முதல் இந்த ஆண்டு ஜூலை 23 வரை ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சேவாலயா காப்பகத்தில் தன்னை ஒரு ஊழியர் நான்கு முறை பாலியல் பலாத்காரம் செய்தார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் இறுதியில் தற்போது சேவாலயா காப்பகத்தின் நிறுவனர் ரவி பாபட்டே, கண்காணிப்பாளர் ரச்னா பாபட்டே, மற்றும் ஊழியர்கள் அமித் மகாமூனி, பூஜா வாக்மரே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட காப்பகமானது எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்காக செயல்படும் காப்பகம். அந்த காப்பகத்தில் தற்போது 23 சிறுவர்களும் 7 சிறுமிகளும் தங்கியுள்ளனர். இப்படிப்பட்ட மையத்தில் இப்படி ஒரு கொடுமை நடந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
வட நாட்டு அரசியலில் திருப்பம் வரப் போகிறது.. ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்!
அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!
தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!
பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!
சிக்கலில் தொக்கி நிற்கும் ஜனநாயகன்.. இந்த இயக்குநர் கேமியோவில் வர்றாராமே!
ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்
77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி
நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!
தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!
{{comments.comment}}