பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்.. 2 நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகிறார்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Mar 28, 2024,07:17 PM IST

சென்னை: மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா ஏப்ரல் 4 மற்றும் 5ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு வருகிறார்.


லோக்சபா தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சி சார்ந்த தலைவர்கள், கூட்டணிக் கட்சிகள் என மாநிலம் முழுவதும் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால்  தமிழக முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது.




இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது பாஜக மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள கட்சித் தலைவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.


வரும் ஏப்ரல் நான்காம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மறுநாள் அதாவது ஏப்ரல் ஐந்தாம் தேதி சென்னையிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார் என  பாஜக தெரிவித்துள்ளது. 


இவருடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே பல கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்து பேசி விட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

அமெரிக்காவில் குடும்பச் சண்டையில் விபரீதம்.. 3 பேருக்கு ஏற்பட்ட கதி.. பரபரப்பு சம்பவம்!

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

சந்தோஷம்!

news

அமைதி, ஆரோக்கியம், செழிப்பு.. நேர்மறை ஆற்றலுக்கு வித்திடும்.. துளசி மாடம்!

news

நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன்.. நான் அரசியலையே தொழிலா பண்றவன்...கராத்தே பாபு பட டீசர் வெளியீடு!

news

உன் புன்னகை!

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்