டில்லி : குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து கெஜட் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இதில் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடரின் முதல் நாளே அலுவல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை, ஜெக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மருத்துவ காரணங்களால் உடல்நிலையை கருத்தில் கொண்டு பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த திடீர் ராஜினாமா அறிவிப்பு பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியது. பகல் 1 மணி முதல் மாலை 5 மணிக்குள் என்ன நடந்தது? துணை ஜனாதிபதி பதவியை ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்ய என்ன காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை எழுப்பி, கேள்வி கேட்டு வந்தன. அதோடு ஜெக்தீப் தன்கர் தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன.
இன்றைய பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்கியதும், ராஜ்யபா துணை தலைவர் ஹரிவன்ஷ் சிங், அவைக்கு தலைமை ஏற்று நடத்தினார். ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி, இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் பார்லிமென்ட் இரு அவைகளிலும் சலசலப்பு நிலவியது.
இதற்கிடையில் ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா கடிதம், குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டதாக அவையில் ஹரிவன்ஷ் அறிவித்தார். தொடர்ந்து அவையில் அமளி நீடித்ததால் பார்லிமென்ட் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}