லண்டன் வீட்டு வாடகை.. விண்ணைத் தொடும் கட்டணங்கள்.. மக்கள் அவதி

Jan 29, 2023,09:36 AM IST
லண்டன்: லண்டனில் வீட்டு வாடகை உச்சத்தைத் தொட ஆரம்பித்துள்ளதால் பலரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் எப்போதுமே வாடகை மற்றும் செலவுகள் ஜாஸ்திதான். குறிப்பாக வீட்டு வாடகை அதிகமாகவே இருக்கும். தற்போது அது சாதனை அளவை எட்டும் அளவுக்கு உச்சத்தைத் தொட ஆரம்பித்துள்ளதாம்.


மாத வாடகை ரூ. 3 லட்சம் அளவுக்கு பல பகுதிகளில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  இது இன்னும் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். ஏற்கனவே மின் கட்டண உயர்வு உள்ளிட்ட செலவுகள் அதிகரிப்பால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் வீட்டு வாடகையும் அதிகரித்து வருவதால் அவர்கள் திணறலில் மூழ்கியுள்ளனர்.

கடந்த ஆண்டிலிருந்துதான் வீட்டு வாடகை கிடுகிடுவென உயரத் தொடங்கியது.  புதிய வீடுகளுக்கு 9.7 சதவீத அளவுக்கு வாடகை உயர்ந்துள்ளதாம். 

லண்டனைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தனது வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் 2 கார் நிறுத்துமிடங்களை மாதம் ரூ. 10,000 என்று வாடகைக்கு விட்டிருக்கிறாராம். 6 ஆண்டுகளுக்கு ரூ. 7 லட்சம் என்று அவர் அதை வாடகைக்கு விட்டிருக்கிறாராம்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்