- க.பிரியா
பாட்னா: 2 கட்டமாக நடந்த 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலானது, மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவை நாட்டுக்கு அளித்துள்ளது. அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது இந்தத் தேர்தல் முடிவுகள். காரணம் கணிப்புகள் சொன்னது ஒன்று, நடந்தது மற்றொன்று.
மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இத்தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (NDA), எதிர்க்கட்சிகளின் தலைமையிலான மகாகாத்பந்தனும் நேருக்கு நேர் மோதின.
வழக்கமாக ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் வெளியாகும் கருத்துக் கணிப்புகள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும். ஆனால் இவை பெரும்பாலும் மாறுபட்டே உண்மை முடிவுகளுடன் ஒத்துப் போகும். அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளுக்கு இடையே உள்ள பெரும் வேறுபாடு, ஒரு பரபரப்பான மற்றும் கூர்மையான அரசியல் பார்வையை வழங்குகிறது.

இந்த நிலையில் சமீபத்திய பீகார் தேர்தல் முடிவுகள், பெரும்பாலான கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்து, ஒரு கட்சி அல்லது கூட்டணிக்குக் கிடைக்கக்கூடிய வெற்றியை அவை எப்படித் தவறாக மதிப்பிட்டன என்பதைக் காட்டுகிறது. அதை விட முக்கியமாக தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்புத்தியுள்ளன.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பாக, பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) சாதகமானதாகவே இருந்தன. அதிகபட்சம் 160 சீட்கள் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் என்று அவை கூறியிருந்தன.பெரும்பாலான கருத்துக் கணிப்புகளின்படி, NDA கூட்டணிக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச இடங்கள் 167 தொகுதிகள் வரை மட்டுமே என்று கணிக்கப்பட்டிருந்தது. யாருக்கும் தனித்த மெஜாரிட்டி கிடைக்காது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணிக்கு 80 இடங்கள் வரை அதிகபட்சம் 100 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் பல கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தன. இந்தக் கணிப்புகள், அரசியல் வட்டாரத்தில் ஒருவிதமான சலசலப்பையும் ஏற்படுத்தியது.
எதிர்பார்ப்பை மீறிய சாதனை
ஆனால், அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை முடிவுகள், கருத்துக் கணிப்புகளை முற்றிலுமாக மறுத்து, ஒரு வியத்தகு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி. எதிர்ப்பார்த்ததற்கு மாறாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இறுதி முடிவுகளின்படி, NDA கூட்டணி 202-இடங்களில் முன்னிலை பெற்று, மிகப்பெரிய வெற்றியை சாதித்துள்ளது. புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை முடிவுகள், கருத்துக் கணிப்புகளை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது. எதிர்ப்பார்த்ததற்கு மாறாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத வகையிலான தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை வாக்குப் பதிவுக்குப் பின்னர் மக்கள் கூறும் கருத்துக்கள் சமீப காலமாக பொய்த்து வருகின்றன. இதில் எந்த இடத்தில் தவறு என்பது தெரியவில்லை. மக்கள் வாக்களித்ததை மாற்றிக் கூறுகிறார்களா அல்லது கணிப்புகளில் தவறு நடக்கிறதா என்றும் தெரியவில்லை.
கருத்துக் கணிப்புகள் தவறாகப் போவதற்கான காரணங்களாக, மக்களின் மாற்றிக் கூறும் கருத்துக்கள் மற்றும் தரவுகள் சேகரிப்பில் பிழை ஏற்படுவது ஆகியவை முதன்மையாக பார்க்கப்படுகிறது.
(கட்டுரையாளர் க.பிரியா, ஒரு கல்லூரிப் பேராசிரியை. கோவையைச் சேர்ந்தவர்)
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!
சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!
சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
{{comments.comment}}