டெல்லி: தனது உடல் எடையைக் குறைப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து பல வேலைகளைச் செய்துள்ளார் வீராங்கனை வினேஷ் போகத். அவரது அத்தனை உழைப்பையும் இந்த தகுதி நீக்கம் முடக்கிப் போட்டுள்ளது, இந்தியர்களின் மனங்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மக்கள் அனைவரின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தவர் வினேஷ்தான். உள்ளூரில் கடுமையான அவமதிப்புக்குள்ளானவர் வினேஷ். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ்பூஷனின் பாலியல் முறைகேடுகளை எதிர்த்து தெருவில் இறங்கிப் போராடி, போலீஸாரால் மோசமாக நடத்தப்பட்டவர். சாலையில் படுத்துத் தூங்கியவர். விடாமல் போராடிய வீர மங்கை. இதனால் அவர் பதக்கம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும், வேகத்திலும் இந்தியர்கள் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் தான் 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் இறுதிப் போட்டி வரை முன்னேறி வந்தார். ஆனால் அவரது எடை 100 கிராம் கூடுதலாக கூறி அவரை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தகுதி நீக்கம் செய்த செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இது இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. என்ன இது அநியாயம். வெறும் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்வதா என்று இந்தியாவில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒலிம்பிக் கவுன்சிலின் முடிவை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்கம் அப்பீல் செய்துள்ளது. நாட்டு மக்கள் பெரும் கொந்தளிப்பான மன நிலையில் இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பிடி உஷாவைத் தொடர்பு கொண்டு பேசி வினேஷுக்கு நியாயம் கிடைக்கத் தேவையான அனைத்தையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தனது எடையைக் குறைப்பதற்காக வினேஷ் எப்படியெல்லாம் பாடுபட்டார் என்ற விவரம் வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. பல நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளார். தனது தலைமுடியை ஒட்ட வெட்டியுள்ளார். தொடர்ந்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். எடையைக் குறைப்பதற்காக கிட்டத்தட்ட உயிரைப் பணயம் வைத்துள்ளார் வினேஷ் போகத்.
வழக்கமாக அவர் 53 கிலோ எடைப் பிரிவில்தான் மோதுவார். ஆனால் இந்த முறை 50 கிலோ எடைப் பிரிவில் மோத முடிவு செய்து உடல் எடையைக் குறைத்து வந்தார். இதற்காக நிறைய தீவிர உடற் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். பல நாட்களாக அவர் சரியாக சாப்பிடக் கூட இல்லையாம். மிக மிக குறைவாக சாப்பிட்டு வந்துள்ளார். தினசரி உடற்பயிற்சியை பல மணி நேரம் செய்து வந்துள்ளார். ஆனால் தற்போது எல்லாமே வீணாகி விட்டது. கடைசி நேரத்தில்தான் ஒரு கிலோ எடை கூடுதலாக இருப்பதை அறிந்து, செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்துள்ளார். விடிய விடிய செய்தும் கூட அவரால் முழுமையாக எடையைக் குறைக்க முடியாமல்தான் தற்போது தகுதி நீக்கமாகியுள்ளார்.
சதி வேலை காரணமா?
இதற்கிடையே, வினேஷ் போகத் தகுதி நீக்கம் இந்தியாவில் பலத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவருக்கு எதிராக சதி நடந்திருக்கலாம் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் புகார் தெரிவித்துள்ளனர். லோக்சபாவிலும் இது இன்று எதிரொலித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் தனது பயிற்சியாளர் தனக்கு எதிராக இருப்பதாக வினேஷும் கூட குற்றம் சாட்டியிருந்தார். தற்போதைய தகுதி நீக்கத்திற்கு உடல் எடைதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}