Operation Sindoor: பொற்கோவிலை தாக்கும் பாகிஸ்தான் திட்டத்தை.. இந்தியா முறியத்தது எப்படி?

May 19, 2025,07:11 PM IST

டெல்லி: இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானின் பெரும் சதித் திட்டத்தை முறியடித்துள்ளது. அதாவது அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலை தகர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதைத்தான் இந்தியா முறியடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


மே மாதத்தின் தொடக்கத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு இரவுகள் கடுமையான மோதல் நிலவியது. அப்போது, அமிர்தசரஸ் உட்பட பல எல்லை நகரங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டன. பாகிஸ்தானின் ஒவ்வொரு drone மற்றும் missile தாக்குதலையும் முறியடித்த இந்தியாவின் Air Defence system செயல்பாடு குறித்த demo ஒன்றை இந்திய ராணுவம் தற்போது பகிர்ந்துள்ளது. 


AKASH missile system மற்றும் L-70 Air Defence Guns போன்ற Air Defence systemகள், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலையும், பஞ்சாபின் பிற நகரங்களையும் பாகிஸ்தானின் missile மற்றும் drone தாக்குதல்களில் இருந்து காப்பாற்றின.  இதனால் கோபமடைந்த பாகிஸ்தான், LoC மற்றும் சர்வதேச எல்லைகளில் (IB) பீரங்கி மற்றும் shell தாக்குதல்களை நடத்தியது. இதன் மூலம் இந்திய ராணுவத்தை சீண்டியது. 




இந்திய ராணுவம் பாகிஸ்தானின் திட்டத்தை எப்படி முறியடித்தது என்பது குறித்த ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. 15வது காலாட்படை பிரிவின் GOC மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி, ராணுவம் இந்த ஆபரேஷனை எவ்வாறு செயல்படுத்தியது என்பதை விளக்கினார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் துல்லியமான ஆயுதங்களைக் கொண்டு தீவிரவாதிகள் இருக்கும் இடங்களை மட்டுமே குறிவைத்து தாக்கினோம். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொண்டோம். இந்த உண்மையை பாகிஸ்தான் ராணுவமே ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியாவில் தாக்குவதற்கு எந்த இலக்கும் இல்லை. இந்திய ராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியமோ, திறனோ அவர்களுக்கு இல்லை. அதனால், அவர்கள் தீவிரவாதத்தை ஒரு தேசிய கொள்கையாக பயன்படுத்துகிறார்கள். மேலும், தங்கள் சொந்த மண்ணிலிருந்து ஆளில்லா விமானங்களை ஏவுகிறார்கள் என்றார் அவர்.


தொடர்ந்து அவர் பேசுகையில், அவர்கள் மத வழிபாட்டு தலங்களையும் குறிவைத்து தாக்கினர். குறிப்பாக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இது உலகளவில் அறியப்பட்ட ஒரு புனித ஸ்தலம். இங்கு பல drone மற்றும் missile தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால், நமது ராணுவம், விமானப் படையினர் அவற்றை தைரியமாக தடுத்து நிறுத்தினர். இந்திய ராணுவமும், Air Defence படையினரும் அவர்களின் அனைத்து திட்டங்களையும் முறியடித்து, அனைத்து விதமான வான்வழி அச்சுறுத்தல்களையும்  தடுத்தார்கள் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்