டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு அளித்து தே துரோக செயலில் ஈடுபட்டதாக கைதாகியுள்ள யூடியூபர் ஜோதி ராணி என்கிற ஜோதி மல்ஹோத்ரா குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோதி மல்ஹோத்ரா என்ற ஜோதி ராணி சனிக்கிழமையன்று பாகிஸ்தானுக்காக வேவு பார்த்த குற்றச்சாட்டுக்காகவும், முக்கியமான இந்திய இராணுவத் தகவல்களை கசியவிட்டதாகவும் கைது செய்யப்பட்டார். 33 வயதான இவர் உள்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?
ஜோதி மல்ஹோத்ரா ஹரியானாவைச் சேர்ந்த ஒரு டிராவல் யூடியூபர். ஜோவுடன் ஒரு பயணம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான 'travelwithjo1'-க்கு 1.37 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம் பயோவில், நாடோடி சிம்ம ராசிப் பெண். சுற்றித் திரிபவர். பழைய சிந்தனைகள் கொண்ட நவீன ஹரியானா மற்றும் பஞ்சாபிப் பெண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது சமூக ஊடக பதிவுகள், அவருக்கு பைக் ஓட்டுவதிலும், தனியாகப் பயணம் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் இருப்பதைக் காட்டுகின்றன. திருமணமான ஜோதி மல்ஹோத்ரா இந்தியாவின் பல பகுதிகளுக்குப் போயுள்ளார். பாகிஸ்தான், பூட்டான், இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.
அவர் இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார், அங்கிருந்து அவர் வெளியிட்ட காணொளிகள் இந்திய புலனாய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர் லாகூரின் அனார்கலி பஜார், கட்டாஸ் ராஜ் கோயில் மற்றும் பாகிஸ்தான் முழுவதும் பேருந்தில் பயணம் செய்வது போன்ற பல வீடியோக்களையும், குறும்படங்களையும் பாகிஸ்தானிலிருந்து பதிவேற்றினார். அவரது இன்ஸ்டாகிராம் தலைப்புகளில் ஒன்று "இஷ்க் (காதல்) லாகூர்" என்று இருந்தது. மேலும், அவரது பதிவுகளில் இந்திய மற்றும் பாகிஸ்தானிய கலாச்சார ஒப்பீடுகளும், பாகிஸ்தானிய உணவு வகைகளின் விவரங்களும் இடம்பெற்றிருந்தன.
பாகிஸ்தானில் விருந்து.. பாலியில் ஜாலி
2023 ஆம் ஆண்டில், ஜோதி மல்ஹோத்ரா முதல் முறையாக பாகிஸ்தானுக்கு விசா பெற்றுச் சென்றார். இந்த விசா கமிஷன் ஏஜென்ட்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியான எஹ்சான்-உர்-ரஹீம் என்ற டேனிஷுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர், ரஹிமுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டார். ரஹிம் அவரை பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.
ஜோதி மல்ஹோத்ரா இந்தியா திரும்பிய பிறகும் அந்த உளவு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இந்திய ராணுவத்தின் நகர்வுகள் மற்றும் இருப்பிட விவரங்களை அவர் பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர் பாகிஸ்தான் சென்றிருந்தபோது, ரஹீமின் கூட்டாளியான அலி அஹ்வான் ஜோதி மல்ஹோத்ராவுக்கு விருந்தளித்துள்ளார்.
ஸ்ரீநகர் ரயில் பாதை குறித்து உளவு
2024 ஆம் ஆண்டில், அவர் காஷ்மீருக்கும் பயணம் செய்து, டால் ஏரி மற்றும் ஸ்ரீநகர்-பனிஹால் ரயில் பாதை குறித்த வீடியோக்களை பதிவேற்றினார். ஒரு பாகிஸ்தானிய உளவாளியுடன் அவர் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டதாகவும், அவருடன் இந்தோனேசியாவின் பாலிக்குச் சென்றதாகவும் புலனாய்வாளர்கள் மேலும் கூறுகின்றனர்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கைக்குப் பிறகு ஜோதி குறித்த விவரம் தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் தூதரக அதிகாரியான ரஹிம் விரும்பத்தகாத நபர் என்று அறிவிக்கப்பட்டு, மே 13 அன்று இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செப். 5ம் தேதி மனம் திறந்து பேசுவேன்.. செங்கோட்டையன் திடீர் அறிவிப்பு..அதிமுகவில் மீண்டும் சலசலப்பு
ஒன்றிணையாத அதிமுக.. ஓபிஎஸ்ஸைக் கண்டுக்காத இபிஎஸ்.. மீண்டும் சேர்க்காததற்கு இது தான் காரணமா?
வெற்றிமாறன் முடிவால் சலசலப்பு.. வித்தியாசமான படத்தை.. விரும்பியது போல எடுப்பது கனவுதானா?
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
பாஜக உயர்மட்ட குழு கூட்டம்: அவசரமாக நாளை டெல்லி செல்கின்றனர் தமிழக தலைவர்கள்
சூடானை உலுக்கிய நிலச்சரிவு.. 1000 பேர் மாண்ட நிலையில்.. ஒருவர் மட்டும் பிழைத்த அதிசயம்!
ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!
டிரம்ப் புலம்பல்.. இந்தியாவுடனான வர்த்தக உறவு ஒரு தலைப்பட்சமாக இருக்கிறதாம்.. அதனாலதான் வரியாம்!
நான் யார் என்று தெரிகிறதா? தன்னை மீண்டும் நிரூபித்த ராமதாஸ்.. நாளை வரப் போகும் அறிவிப்பு!
{{comments.comment}}