Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?

Dec 09, 2025,10:27 AM IST

- மைதிலி அசோக் குமார்


நாயகன்:தனுஷ் 

நாயகி: கீர்த்தி ஷனான் 

இயக்குனர்: ஆனந்த L. ராய் 

இசை:  ஏ.ஆர். ரஹ்மான்..


முதலில் பாடல்களைப் பற்றிச் சொல்லி விடுவோம். இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான், அனைத்து பாடல்களும் நேராகவே கேட்பவர் மனதில் பதிந்து தலை அசைத்து கைகள் தாளம் போட வைக்கிறார் . Aesthetic sense... உணர்ந்து பாடலை நம் உணர்வோடு கலந்து விடுகிறார்... அனைத்தும் A+++ ரகம் .


அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட் வரிசையில் மீண்டும் ஒரு காதல் ( கொஞ்சம் High five love) கதை. 

காதல்னாலே  அனர்த்தமான அர்த்தம்.. கொள்ளும் இந்த காலத்தில் வரலாற்று காவியமாக கொஞ்சம் பணாரஸ் பின்னணியோடு aesthetic sense கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர். 




காதல் தோல்வியால் நொந்து நூடுல்ஸ் ஆன பல இளைஞர்களின் குமுறல்கள் தியேட்டர் சுவர்களில் பட்டு எதிரொலிக்கின்றதை காணமுடிகிறது .


நாயகன்: தனுஷ். நம்ப பக்கத்து வீட்டு பையன் போல இயல்பான இளமையான முகம்,  மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட , பல படங்களில் பார்த்த "காதலன்" கதாபாத்திரத்தில்.


புதுமுகம் நாயகி: அழகான கோதுமை பதுமையாக introduce ஆகி கதாபாத்திரமாகவே மாறி மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுகிறார்.  நீண்ட முகபாவம்... பேசும் கண்கள், நீண்ட நெடிய ஒல்லியான தேகம், அசத்தலான உடல் மொழி என்று அனைத்திலும் மேல் தட்டு நாகரீகம் மிளிர நாயகனை மட்டும் அல்ல ரசிகனையும்   நல்லவற்றை மட்டும் செய்யும்" *God syndrome "*ல் கட்டிப் போடுகிறார். போகப்போக தன் காதலினால் நாயகனை போல் ரசிகனும் அன்பின் அரவனைப்பில் கட்டுண்டு கிடக்கும் நிலைக்கு தள்ளி விடுகிறார்.‌ மீளவழி இருந்தாலும் யாருக்கும் விருப்பமில்லை.‌ ஆமாம் இவ்வளவு அழகான தேவதையை miss பண்ண யாருக்கு தான் மனசு வரும்???. 


நாயகனின் தந்தையாக பிரகாஷ் ராஜ் அன்பான lower middle class தந்தையின் கதாபாத்திரத்தில் எப்போதும் போல் வெளுத்து வாங்குகிறார்.‌ கூடவே சுத்தும் செவ்வாழையாக பீடா போடும் காவி பல் இளைஞன்,  மற்றும் ஒரு அன்பாலே அரவனைத்து செல்லும் தோழன் cum கணவன் கதாபாத்திரம்.‌  நாயகியின் Joint secretary தந்தை கதாபாத்திரம்.


கதை: நாம் ஏற்கனவே பார்த்த காதலன் படக்கதை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து களம் இறங்கி உள்ளது... நாயகி மேல் தட்டு வர்க்கம்...(.ஆத்தாடியோ.....செயல்பாடுகள் ...தம் அடிப்பது, பீர் அடிப்பது. ...சாமி...நம் பண்பாடு கலாச்சாரம் எங்கே போகிறதுனு... தெரியலியே..) 


ஷங்கர் as usual டில்லியில் சிறு இரண்டு அரை கொண்ட மாடி வீட்டில் .  தந்தையோடு வசிக்கும்...law college student . சிறுவயதில் நெருப்பில் தாயை இழந்தவர்.‌ ஆகையால் மூர்க்கத்தனமான செயல்பாடுகள்.. behavioural problems கொண்டவர். 

 

முக்தி.. Psychiatrist.. PhD student ( நாயகி  கீர்த்தி) தன்னுடைய project நிறைவுக்காக  ஷங்கரை திருத்தி மனிதன் ஆக்க முன் வருகிறார். அதற்காக எந்த எல்லைக்கும் (!!!!!!) OMG.) செல்கிறார். 


கடமைக்கு பழகிய பழக்கம் நாளடைவில் ஷங்கரின்  மனதை மாற்றி காதலாக மலர்கிறது.  கடமைக்கும் காதலுக்கு நடுவில் முக்தி தவிக்கிறார். தன் தந்தையின் உதவியை நாடுகிறார். Joint secretary ஆன பணக்கார தந்தை., நாயகனை..UPSC exam pass செய்து ஒரு பெரிய நிலைக்கு வரும்படி தட்டிக் கழிக்கிறார். ஷங்கரும் அதை நம்பி தீவிரமாக 3 வருடம் படித்து prelims pass செய்து நாயகியை காண வருகிறார்.


தனக்கு திருமணம் நடந்தால் அது நாயகனின் காதலை மாற்றிவிடலாம் என்று கருதி தனது சிறுவயது முதலே தன்னை நன்கு அறிந்த தோழனை கரம் பிடிக்கிறார் முக்தி.  கோபம் கொண்ட ஷங்கர் அவர் வீட்டில் நடக்கும் நிச்சயதார்த்தம் விஷேத்தில் புகுந்து petrol குண்டு வீசுகிறார். நாயகனை போலீஸ் arrest செய்து தர்ம அடி கொடுக்கிறார்கள். தந்தை பிரகாஷ் ராஜ் அனைவரின் காலிலும் விழுந்து மகனை மீட்டு வரும் வழியில்.... வேகமாக வண்டியை ஓட்டிச் சென்று நடுரோட்டில் சறுக்கி விழுந்து உயிரை விடுகிறார். 


அங்கு தான் turning point... காசியின் பண்டிதர் கூறிய அறிவுரையை(!!!!) ஏற்று மனமாற்றம் பெற்று ஷங்கர் தன் தந்தையின் கனவை நிறைவேற்ற  flight ஓட்டும் பயிற்சி பெற்று., Indian Air force ல் போர் முனையில் வேலை பார்க்கிறார். நாயகனை மறக்க முடியாத முக்தி குடித்து தன் உடல் பாதிப்பு அடைந்த நிலையில் ஒன்பது மாத கருவை சுமந்து கொண்டு நாயகனை பார்க்க வருகிறார்.


தன்  குழந்தையை காப்பாற்ற சத்தியம் வாங்கிக் கொண்டு கையெழுத்து போட்டு தருகிறார். போரில் முக்தி யின் கணவர் உயிரை காப்பாற்ற தன் உயிரையும் துச்சமாக நினைத்து எதிரி கப்பலில் தன்னுடைய flight ட்டை செலுத்தி அவர்களை அழித்து தானும் அதே இடத்தில் தன் இன்னுயிரை காதலுக்காகவும் நாட்டுக்காகவும் தியாகம் செய்கிறார் ஷங்கர்...


அதே நேரத்தில் அழகான  குழந்தையை பெற்றெடுத்த நாயகியின் உயிரும் பிரிகிறது. கங்கை கரையில் இரண்டு பிண்டங்களை பண்டிதர் வைக்கிறார். ..நாயகனுக்கு .. வாழும் போது கிடைக்காத முக்தி இறப்பிலாவது... கிடைக்கட்டும்.. ஹர ஹர ஹர ‌...மஹா தேவா ...


வாழ்க்கை பல பாடங்களை கற்றுத் தருகின்றன. மிகுந்த துன்பம் வந்தால் தான் இறை நினைவு பலருக்கு வருகிறது. தற்போது வரும் தனுஷ் படங்களில் ஈசுவரா அம்சங்கள் பொருந்தி வருவதை காணமுடிகிறது. 


அது ஏன் என்று தெரியவில்லை... psychiatrist படித்தவர்கள் நாளடைவில் அதன் தன்மை கொண்டவர்களாகவே மாறி விடுகின்றனர்.( எ.கா- தெனாலி ) நாயகியின் தன்மையும் அதே.. போல் ...சாக்கடை புழுவை திருத்த கிளம்பி தானே அந்த குழியில் விழுந்து முடிவில் உயிரையும் இழக்கிறார்.


நாளைய இளைஞர்களுக்கு காதலுக்கான அகராதியாக மேலும் ஒரு படத்தை வழங்கி இருக்கும் team effort.... (இதான்டா லவ்வு.....அடேய் நாடு எங்கடா...போயிட்டு இருக்கு)  


தனுஷ் காதலுக்கு நடனமாடும் இன்னொரு தனுஷ். அப்படியே பிரபுதேவா நடனம் ஞாபகம் வருகிறது. ரசிக்கும் படியாக இருக்கிறது.


6 அடி நாயகியின் உயரம் தெரியாத அளவுக்கு camera angle adjustment. 


எத்தனையோ விதமான காதலை திரையில் பார்த்து பழகிய ரசிகனுக்கு அலுக்காமல் சலிக்காமல் பழைய மொந்தையில் புதிய கள் supply செய்யப்பட்டு உள்ளது.‌ (old wine in new bottle.).


(செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மைதிலி அசோக்குமார், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!

news

தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?

news

விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!

news

Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?

news

நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

ஓம்கார ஹரியே .. ஒம் ஒம்ஹரியே கோவிந்தஹரியே .. கோவர்த்தனம் சுமந்த ஹரி நீ!

news

பேரின்பப் பெருவாழ்வு பெற்று உய்க... தேவாரத் தலங்களின் விளக்கமும், செல்லும் வழிகளும்!

news

நவதானிய லட்டு.. கர்ப்பிணிப் பெண்களுக்கு சூப்பரான உணவு.. ரத்தம் ஊறுமாம்!

news

சுண்டலான்னு.. கிண்டலா கேட்காதீங்க பாஸ் .. புரதங்களின் அரசன்.. குழந்தைகளின் சிறந்த snacks!

அதிகம் பார்க்கும் செய்திகள்