சென்னை: என்னங்க எப்படி இருக்கீங்க.. இன்னிக்கு பெரும்பாலானவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை வெள்ளை முடி தாங்க. சிலருக்கு சிறுவயதிலேயே நரைமுடி, ஸ்ட்ரெஸ் காரணமா பல பேருக்கும் இந்த பிராப்ளம் இருக்குங்க. அதுக்காக இவங்க கடையில கிடைக்கிற அனைத்து விதமான கெமிக்கல் கலந்த ஹேர்டை இதெல்லாம் யூஸ் பண்றாங்க.
பெரும்பாலும், அவை அனைத்திலும் பாரஃபின், அம்மோனியா போன்ற ரசாயனங்கள் அதிகமா இருக்கிறதால மருத்துவர்கள் அவற்றை பயன்படுத்த கூடாதுன்னு சொல்லிட்டு தான் இருக்காங்க. இந்த ரசாயனங்களால் பலருக்கு அலர்ஜி,அரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஆனாலும் நரையை மறைக்க இப்படி ஏதாவது செய்துதானே ஆக வேண்டியிருக்கு. ஆனால் அதுக்கும் நிவாரணம் இருக்கு, ஒரு மாற்று வழி இருக்கு.. அதுதான் இயற்கையான முறையில் செய்யும் கலரிங்.
சரி, இப்ப தலைக்கு இயற்கையான முறையில் எப்படி கலர் பண்ணறதுன்னு பாப்போம், வீட்ல உள்ள ஈஸியான பொருட்களை வைத்து நம்ம நேச்சுரலா ஹேர் கலர் பண்ணிக்கலாம்ங்க. அது எப்படின்னு வாங்க பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:
வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்
டீ தூள்-1 டேபிள்ஸ்பூன்
கிராம்பு - 1 டேபிள் ஸ்பூன்
காபி பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
அரிசி - 2 டேபிள் ஸ்பூன்
ஹென்னா பவுடர் - 3 மூணு டேபிள் ஸ்பூன்
ஹேர் பேக் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் வெந்தயம் ரெண்டு டேபிள் ஸ்பூன், டீ தூள் ரெண்டு டேபிள் ஸ்பூன், கிராம்பு ஒரு டேபிள் ஸ்பூன், காபி பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன்,அரிசி 2 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் சிறிது தண்ணீர் கலந்து மிக்ஸ் செய்த கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்க வைத்துக் கொள்ளவும். பின் இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி நன்கு ஆற வைக்கவும்.
பின் ஒரு பவுலில் மூன்று டேபிள் ஸ்பூன் ஹென்னா பவுடர் சேர்த்து ஆறிய இந்த கலவையை வடிகட்டி சேர்த்து நன்கு பேஸ்ட் பதம் வரும் வரை கலக்கவும். ஹேர் பேக் தயார்.
பயன்படுத்துவது எப்படி

முதலில் தலைமுடியை பல்வேறு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும். பின்னர் ஹேர்பேக்ஸ் மிக்ஸை ஹேர் பிரஷ் அல்லது சீப்பை பயன்படுத்தி ஒவ்வொரு பாகத்திலும் நன்றாக படும்படி தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். பின்னர் தலையில் ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் கவர் கொண்டு நன்றாக மூடி நான்கு மணி நேரம் வைக்கவும். பின்பு நன்கு தலையை அலசினால் உங்கள் முடி பிரவுன் அல்லது சிவப்பு நிறத்தில் மாறிவிடும். இயற்கை ஹேர் கலர் உங்கள் வெள்ளை முடியை மாற்றி உங்களுக்கு இளமையான தோற்றத்தை அளிக்கும்.
குறிப்பு: ஹேர்பேக் போடும் பொழுது வெறும் தண்ணீரில் மட்டுமே முடியை அலச வேண்டும் ஷாம்பு எதுவும் பயன்படுத்தக்கூடாது. அடுத்த நாள் ஷாம்பு போட்டு தலையை அலசிக் கொள்ளலாம். மேலும் உரிய நிபுணர்களின் ஆலோசனைக்குப் பிறகு இதுபோன்ற கலரிங்குகளை மேற்கொள்வது நல்லது.
3 உதயசூரியன்.. ஒரு தனிச் சின்னம்.. ஆக மொத்தம் மதிமுகவுக்கு 4 சீட்.. 2 தொகுதிகள் குறைவு!
ஐபிஎல் 2026: முதல் கட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் தொடக்க ஆட்டம்.. சென்னைக்கு எப்போ?
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
{{comments.comment}}