தனிமை தந்த வலி துறக்க வழி இதோ..!!

Feb 21, 2023,04:23 PM IST
- ஹம்ரிதா

இவ்வளவு கோடி மக்கள் வாழும் உலகில் ஒருவர் தனிமையை உணர்வது சாத்தியமா!! என பலர் ஆச்சரியம் கொள்கையில், தனிமையில் தத்தலிப்பவர் கரை தேடி அலைந்துகொண்டு தான் இருக்கின்றனர்..



தனிமை உணர்வு உங்களை ஆட்கொண்டதா!! நாம் பேசவோ அல்ல நம்மிடம் பேசவோ யாரும் இல்லை என்று தோன்றுகிறதா.. நால்புறமும் சுவர் சூழ உங்கள் தினசரியை கழிக்கிறீர்களா... ஆனால் உங்களுக்கென ஒரு சுற்றம் வேண்டும் என்று எண்ணுகிறீர்களா..

அதை சாத்தியம் ஆக்க முதலில் ஒரு அடி முன் வைக்க வேண்டும்.. வீட்டு கதவையும் மன கதவையும் திறந்து வந்து சூரிய ஒளி வீசும் வானம் பார்த்து கை விரித்து பெருமூச்சு விட்டு, சிறு புன்னகையுடன் தனிமை உடைக்க முயற்சிக்க முதல் நாள் முதல் அடி என மனதுக்கு தைரியம் ஊட்டுங்கள்..

நீங்கள் ஏற்கனவே பழகிய நபர்கள் மீது நம்பிக்கை இல்லையா.. இருந்தும் மீண்டும் ஒரு முறை சிந்தித்து பாருங்கள் எவரேனும் நீங்கள் தனிமையில் இருக்கையில் அக்கறை கொண்டு உங்களை தொடர்புக்கொள்ள முயற்சித்தனரா என்று.. எனெனில் தனிமையில் மூழ்கி இருக்கையில் இப்படிப்பட்ட சிறு அக்கறைகளை நம்மால் உணர முடியாமல் போகலாம்..

அப்படி எவரேனும் இருந்தால் அவர்களை  நாடுங்கள்.. அவர்களிடம் உங்கள் தனிமை உணர்வு பற்றியும்  அதான் காரணங்கள் பற்றியும் கொட்டி தீருங்கள் மனதை.. வெளிப்படையாக பேசும் போதே தனிமையை உடைத்து விடுகிறீர்கள்.. பிறகு நீங்கள் எதிர்பார்த்த அந்த தனிமை இல்லா சுற்றம் தானாக அமையும்..

ஆனால் அப்படி உங்கள் தனிமை விலக முன்னரே பழகிய நபர்கள் யாரும் இல்லையா.. கவலை வேண்டாம்.. பழைய சுற்றம் பற்றி புரிந்து கொண்டதால், புது தொடக்கமாக புது சுற்றம் உருவாக்கலாம்..

நம் தினசரி வாழ்வில் பார்க்கக்கூடிய நபர்களில் கவனம் கொள்ளுங்கள்.. நடைப்பாதையில் தினமும் முகம் பார்த்து நகரும் நபராக இருக்கலாம், தினசரி பயணங்களின் போது பார்த்து பழகிய முகம் கொண்டவராக இருக்கலாம், நாம் வாடிக்கையாக போகும் கடைக்காரரோ அல்லது சக வாடிக்கையாளரோ.. அவர்கள் முகம் பார்க்கையில் புன்னகைத்து நகருங்கள்..

நாட்கள் நகர உங்களை அறியாமல் சின்ன சிரிப்பு வார்த்தை பரிமாற்றங்களாக மாறும்.. உங்கள் முகமோ அல்லது எதிரில் இருப்பவர் முகமோ என்றாவது வாடி இருந்தால் மற்றவர் சிறு கனிசம் கொண்டு 'ஏன் வாட்டம் இன்று!!' என்று கேட்க தொடங்கையில் தனிமை மறையும்..

இந்த பயணத்தில் நீங்கள் மிருக விரும்பிகளாக இருந்தால், நீங்கள் தினம் பார்க்கும் நாய் பூனை முதல் காகம் குருவி வரை எல்லாவற்றிடமும் பழகி பாருங்கள்.. அவர்களும் தங்கள் அன்பை பரிமாறுவர்..

மாற்றம் என்றும் நம்மிடம் இருந்து தான் தொடங்குகிறது.. தனிமையில் இருந்து வெளியேற விரும்பினால்- நம்மால் முடியும்.. சிறு முயற்சி மட்டுமே போதுமானது.. நல்ல சுற்றம் நெருங்கி தனிமை தூரமாகும்..

தனிமையின் தாக்குதலில் சிக்கிய மனதை,
மாற்றம் எனும் ஆயுதம் அடைந்து;
சுற்றம் எனும் பரிசு பெருவாய்!

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்