பாஞ்சராத்திர தீபத்தின் முக்கியத்துவம் என்ன.. அதை ஏற்றுவது ஏன்?

Dec 04, 2025,12:10 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பாஞ்சராத்திர தீபம் ( சர்வாலய தீபம் ): விசுவாச வருடம் 20 25 டிசம்பர் மாதம் நான்காம் தேதி வியாழக்கிழமை கார்த்திகை 18 ஆம் நாள் அனைத்து பெருமாள் கோவில்களில் "பாஞ்சராத்திர தீபம்" திருவிழா கொண்டாடப்படுகிறது. ஜோதி வடிவாக  சிவபெருமான் காட்சியளித்த நாளை  திருக்கார்த்திகை திருநாளாக கொண்டாடுகிறோம். அதே போன்று மகாவிஷ்ணு ஜோதி வடிவாக தோன்றி உலகத்தை காத்து நல்லருள் புரிந்த நாளை "விஷ்ணு கார்த்திகை" என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பாஞ்சராத்திர தீபம் விஷ்ணு கோவில்களில் ஏற்றப்படுகிறது. இதனை "சர்வாாலய தீபம்" என்று அழைக்கப்படுகிறது. 


 நேரம்:

 பௌர்ணமி திதியில், கார்த்திகை நட்சத்திரத்தன்று பாஞ்சரத்ர தீபம் விஷ்ணு ஆலயங்களில் ஏற்றப்பட்டு

 வெகு விமர்சையாக,இன்று மாலை ஆறு மணிக்கு பெருமாள் கோவில்களில் "பஞ்சராத்திர தீபம் "எனும் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. நம் வீடுகளில் இன்று மாலை வழக்கமாக வீட்டில் ஏற்றும் தீபத்துடன்,5 தீபங்கள் நெய்  அல்லது நல்லெண்ணெய் தீபம்  பூஜை அறையில்  ஏற்றி வழிபடுவது சிறப்பு. இது சிவ, விஷ்ணு இருவருக்கும் உரிய வழிப்பாடாக அமைகிறது.


புராணக்கதை :  




பிரம்மதேவர் சரஸ்வதி தேவிக்கு தெரியாமல் யாகம் நடத்தியதை அறிந்த சரஸ்வதி தேவி மிகவும் கோபமடைந்தார். எனவே பிரம்மதேவரின் யாகத்தினை தடுப்பதற்கு பிரம்ம ராட்சசன் என்ற அரக்கனை அனுப்பினார். அவன் யாகத்தை தடுக்க உலகம் முழுவதையும் இருளில் மூழ்கச் செய்தான். இதைக் கண்டு மனம் வருந்தி பிரம்ம தேவர் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். மகாவிஷ்ணு ஜோதி வடிவாக தோன்றி உலகின் இருளை போக்கி அந்த அரக்கனையும் வதம் செய்தார். மகாவிஷ்ணு ஜோதி வடிவாக தோன்றி உலகத்தை காத்த திருநாளை "விஷ்ணு கார்த்திகை" என்று கொண்டாடுகிறோம்.


 பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இது வெகு  விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தீபத்திருநாளை முன்னிட்டு  சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. அனைத்து உயிர்களும் தீபம் ஏற்றி வழிபட முடியாது என்பதால் அனைத்து உயிர்களும் இறையருள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தொடர்ந்து மூன்று நாட்கள் சொக்கப்பனை கொளுத்துவார்கள். கோவில் கோபுரம் அருகே சொக்கப்பனை கொளுத்தப்படும்போது எம் பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருள்வார்.


நம் வீடுகளில் பூஜை அறையில் விஷ்ணு பகவானின் படத்தை அல்லது உருவச் சிலையை  மலர்களால் அலங்கரித்து, நைவேத்தியமாக புளியோதரை,தயிர்சாதம், பொங்கல் போன்றவற்றை படைத்து, ஒரு தாம்பூல  தட்டில் ஐந்து மண் அகல் விளக்குகளை ஏற்றி, பெருமாள் மந்திரங்களை கூறி பெருமாளுக்கு தீபாராதனை செய்து வழிபாடுகள் செய்ய குடும்பத்திலும் தொழிலிலும் வரும் பிரச்சினைகள் அகன்று, மன அமைதி,உயர்ந்த வாழ்க்கை,நிம்மதியான வாழ்வு வாழ வழிவகுக்கும் . இவ்வாறு  ஐந்து விளக்குகள் ஏற்றப்படுவது பஞ்சபூதங்கள் இந்த அண்டத்தை ஆளுகின்றன என்பதை உணர்த்துகிறது.


பூஜை செய்யும் பொழுது நமக்கு தெரிந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது சிறப்பு.

 

ஐந்தாயிரம் ஆண்டுகள் தவத்தின் பலன் தரும் பெருமாள் மந்திரம் :


ஸ்ரீய காந்தாய கல்யாண 

நிதயே  நித யேர் த்தி னாம்  

ஸ்ரீ வேங்கட நிவாஸா ய 

ஸ்ரீனிவாசாயமங்க ளம் 

ஸ்ரீ  வே ங்கடாசலதீஸம் 

ஸ்ரீ யாத் யாஸி த் 

க க்ஷஸம் 

ஸ் ரித சேதன மந்தாரம் 

ஸ்ரீனிவாச மஹே ம் பஜே!..


அனைவருக்கும் பாஞ்சராத்திர தீப நல்வாழ்த்துக்கள். மேலும் இதுபோன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஞ்சராத்திர தீபத்தின் முக்கியத்துவம் என்ன.. அதை ஏற்றுவது ஏன்?

news

தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ.320 குறைவு

news

செல்லமாக வளர்ப்பது தவறில்லை.. செல்லாத செல்வங்களாய் வளர்க்கலாமோ!?

news

திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

news

ஓபிஎஸ் டெல்லி விசிட்...பாஜக., தலைவர்களுடன் சந்திப்பு...டெல்லியில் என்ன நடக்கிறது?

news

அவசரப்பட்டு துணியை துவைச்சிராதீங்க.. இன்னும் முடியல.. மழை தொடரும்...இந்திய வானிலை மையம் தகவல்!

news

ரஷ்ய அதிபரின் டெல்லி வருகை...தாறுமாறாக ஏறிய ஹோட்டல் கட்டணங்கள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 04, 2025... இன்று நம்பிக்கை அதிகரிக்கும் நாள்

news

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடல் நலக்குறைவால் காலமானார்

அதிகம் பார்க்கும் செய்திகள்