Lunch Box recipe: பேச்சலர்ஸ், பிகினர்ஸுக்கான.. சத்தான அரைக்கீரை புளி கடையல்!

Nov 08, 2024,02:12 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: இன்னிக்கு லன்ச் உங்க வீட்டுல என்ன.. ஆபீஸில் சாப்பிட உட்காரும்போது எல்லோரும் தவறாமல் கேட்கும் கேள்விதான். 


தினசரி ஏதாவது விதம் விதமா செய்து கொடுத்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அந்த வகையில் செய்வதற்கு எளிதான, அதேசமயம், பைபர் அதிகம் உள்ள உணவு வகையான சத்தான, கீரை கடையலை செய்து ஒரு நாள் லன்ச்சுக்கு கொண்டுப் போய்ப் பாருங்க. உங்க பிரண்ட்ஸ் விட மாட்டாங்க. அப்படி ஒரு சூப்பரான உணவுதான் இது.


எப்படி பண்றதுன்னு பார்க்கலாமா..




தேவையான பொருட்கள்


அரைக்கீரை - 1 கப் (ஆய்ந்து கழுவியது)

சின்ன வெங்காயம் - 10 உரித்தது 

பூண்டு - ஆறு பல் 

சீரகம் - ஒரு ஸ்பூன்

வர மிளகாய் - 6 (4+2)

வெந்தயம் - கால் ஸ்பூன் 

கடுகு + உளுந்தம் பருப்பு - ஒரு ஸ்பூன் (தாளிக்க)

கறிவேப்பிலை - 10 இலை 

கொத்துமல்லித்தழை - சிறிதளவு

புளி -1 (நெல்லிக்காய் அளவு)

தக்காளி - 2

நல்லெண்ணைய் - ஆறு ஸ்பூன் 

உப்பு புளி காரம் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப


செய்முறை 


1. அரைக் கீரை + சின்ன வெங்காயம் + பூண்டு+  தக்காளி + சீரகம் + வரமிளகாய் நாலு, புளி (கழுவியது) கால் கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் இரண்டு விசில் விடவும்.


2. ஆறியதும்,  தண்ணீர் (கீரை தண்ணீர்) வடிகட்டி + மல்லித்தழை சேர்த்து மிக்ஸியில் பல்ஸ் மோடில் ரெண்டு முறை போடவும்.


3. கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கவும். இரண்டு சின்ன வெங்காயம் + ரெண்டு பூண்டு இடித்து எண்ணெய் சட்டியில் போடவும்.


4. வெந்தயம் போடவும். பொன்னிறமாக மாறியதும் கீரை மிக்ஸி ஜாரில் உள்ளதை தண்ணீருடன் (கீரை) ஊற்றவும்.


5. எண்ணெய் பிரிந்து வரும் வரை உப்பு போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.


சூடான சாதம் + கீரை கடையல் + நெய் அல்லது நல்லெண்ணெய் ஊட்டி சாப்பிட அருமையாக இருக்கும்


வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல், பேச்சிலர்ஸ் பிகினர்ஸ்க்கும் கூட இந்த சத்தான அரைக்கீரை கீரை கடையல் சூப்பரா இருக்கும். அதை விட முக்கியம் இது நார்ச்சத்து அதிகம் நிரம்பிய உணவு என்பதுதான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!

news

2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?

news

அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை

news

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு

news

மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?

news

71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு

news

அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!

news

சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்