- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: ஏதாச்சும் மொறு மொறுன்னு சாப்பிட்டா நல்லாருக்குமேன்னு பள்ளிக் கூடத்திலிருந்து வரும் பிள்ளைகள் கேட்கும்போது அம்மாக்களுக்கு சும்மா இருக்க முடியாது இல்லியா.. ஸோ, ஏதாவது யோசிட்டேதான் இருக்க வேண்டியுள்ளது, என்ன பண்ணலாம்னு. சரி இன்னிக்கு ரொம்ப யோசிக்காதீங்க.. உங்களுக்காக நாங்களே ஒரு டிஷ் சூப்பரா யோசிச்சுட்டோம்.. அதைப் பத்தித்தான் இப்ப பார்க்கப் போறோம்.
பச்சைப் பூக்கோசு என்று கூறப்படும் ப்ரோக்கோலி, அப்புறம் குடைமிளகாய் இந்த ரெண்டயும் சேர்த்து வச்சுப் பண்ணப் போற ஸ்டிர் ஃப்ரைதான் இன்னிக்கு டிஷ். வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

1. ப்ரோக்கோலி ஒன்று கட் செய்தது ஒரு கப்2. குடைமிளகாய் ஒன்று கட் செய்தது
3. பெரிய வெங்காயம் ஒன்று கட் செய்தது
4.மிளகுத்தூள் அரை ஸ்பூன்
5. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
6. பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
7. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
8. பூண்டு ஆறு பல் தட்டிக் கொள்ளவும்
9. சீரகம் அரை ஸ்பூன்
10. கடலை எண்ணெய் இரண்டு ஸ்பூன்
11. உப்பு காரம் தேவைக்கு ஏற்ப
12. மல்லித்தழை சிறிதளவு
செய்முறை
கட் செய்து சூடான தண்ணீரில் மஞ்சள் பொடி, கல் உப்பு ஒரு ஸ்பூன் போட்டு இரண்டு நிமிடம் அப்படியே விடவும் .பிறகு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தட்டிய பூண்டு போட்டு நன்கு வறுக்கவும்
பிறகு பெரிய வெங்காயம் போடவும் .நன்றாக வதக்கவும் .அதன்பின் மஞ்சள் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம் தூள் போடவும் .ப்ரோக்கோலி கட் செய்தது போடவும். நன்றாக வதக்கவும்.
பிறகு கட் செய்த குடமிளகாய் சேர்க்கவும். ஒரு மூடி போட்டு வேக வைக்கவும். அதன் பின் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
இறக்கியபின் மல்லித்தழை போட்டு சர்வின் பவுலில் மாற்றவும்
ப்ரோக்கோலி பயன்கள்
1. இது பச்சை பூக்கோசு என்று பெயர் முட்டைகோஸ் வகையை சேர்ந்த காய்கறி
2. அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாகும்
3. கொழுப்பு சத்து குறைந்தது
4. நார்ச்சத்து மிகவும் நிறைந்தது
5. கால்சியம் சத்து அதிகம்
6. சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத் திருக்க அருமையான உணவு
7. சரும நோய்கள் விலகும் தோல் பளபளப்பாக இருக்க உகந்த உணவு
8. வைட்டமின் சி ,கே ,ஒமேகா 3 இதில் மிகவும் நிறைந்துள்ளது.
9. வாரத்தில் மூன்று முறை எடுத்துக் கொள்ள அதீத நன்மை பயக்கும். ஈசியாக ப்ரோக்கோலி குடமிளகாய் ஸ்டிர் ஃப்ரை செய்து பாருங்கள்.
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு
{{comments.comment}}