- பாவை.பு
விவசாய வேலை செய்ய ஆட்கள் இல்லை கிடைத்தாலும் கூலி போதவில்லை என்கிறார்கள், குறு சிறு விவசாயிகள் படும் பாடு சொல்லி மாளாது. ஆட்கள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமே 100 நாள் வேலை திட்டமும், நியாய விலைக் கடையில் கிடைக்கும் இலவச அரிசியும் ஒரு காரணம் என்று சொல்கிறார்கள்.
எந்தவொரு பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலாவது மதிப்பீடு செய்து கொடுத்தால் தான் விவசாயிகளின் வேதனை தெரியும். மக்களை சோம்பேறி ஆக்குவதோடு இல்லாமல் ஒரு விதத்தில் அவர்களை அடிமையாக்கும் செயலும் கூட.
மாற்றுத்திறனாளிகள், ஆதரவு அற்றவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை தவிர யாருக்கும் இலவச அரிசி வழங்க கூடாது.
விவசாய பணியில் ஈடுபட அதிகளவில் உடல் வலிமையும் உழைப்பும் தேவை, ஆனால் தற்போது உள்ள இளைஞர்களுக்கு அது இல்லை, விவசாய வேலை செய்யும் ஆர்வமும் இல்லை. இதனால் அவர்கள் நகர்ப்புறங்களை நோக்கி செல்கிறார்கள்.

விவசாயம் ஒரு சிரமமான வேலை தான், ஆனாலும் சிரமம் பார்க்காமலும் ஆரோக்கியம் குறையாமலும் இருந்தார்கள் அந்த காலத்தில். தற்போது தான் ஆட்கள் பற்றாக்குறையால் அனைத்திற்கும் இயந்திரம் வந்தாச்சு, இந்த 30 ஆண்டுகளில் விவசாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால்.
கதிரை அறுத்து, அதை களத்திற்கு லாவகமாக கொண்டு வந்து சேர்த்து, தானே அடித்து நெல் தனியாக வைக்கோல் தனியாக எடுப்பது என்பது விவசாயம் இரத்தத்தில் கலந்ததாலே இது சாத்தியமானது, அவர்களுக்கு இது சாதாரண வேலை. அதை நேர்த்தியாக செய்ய உடல் வலுவும் இருந்தது.
இதற்கு காரணம் அவர்களின் உணவு முறை. 30 வருடங்களுக்கு முன்பு வரை கம்பு கேழ்வரகு சோளம் வரகுஅரிசி என அதுவும் இயற்கை முறையில் விளைந்த தானியத்தையும் கீரைகளையும் சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல் உடல் உழைப்பும் சரியாக இருந்தது.
இதனால் பெருமளவில் ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்தார்கள். அவர்களுக்கு 60 70 வயதில் வந்த எலும்பு மூட்டு தேய்மானம் தற்போது 30 வயதிலே காணமுடிகிறது.
இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் 60 சதவீத மக்கள் எலும்பு தேய்மான பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள் அதில் பாதி பேருக்கு 30 வயதிலே காணமுடிகிறது.
பொதுவாக மனித உடம்பில் உள்ள எலும்புகள் 30 வயது வரை நன்கு வலிமையாக இருக்கும், 30 வயதிற்கு பிறகு எலும்பு தேய்மானம் தொடங்கி 45 வயதிற்கு மேல் வேகமெடுக்க தொடங்குகிறது.
ஆனால் தற்போது 40 வயதிற்குள்ளாகவே அதிகப்படியான தேய்மானத்தை கண்டுள்ளது. எதனால் இப்படி ஏற்படுகிறது வயது ஏற ஏற எலும்பு தேய்மானம் இயற்கை. ஆனால் இளைய வயதில் ஏற்பட காரணம் பல சொல்லப்படுகிறது..
அதில் கால்சியம் மற்றும் வைட்டமின் D குறைபாடாலும் , பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்திலும், பரம்பரை எலும்பு தேய்மானம் பிரச்சனையாலும், அதிகப்படியான மது மற்றும் குடிப்பழக்கத்தாலும், போதிய உடற்பயிற்சியில்லாமையாலும்,மன உளைச்சல், கோபம், தாழ்வு மனப்பான்மை என பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது என்றாலும், உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றமும் பிரச்சனைக்கு முக்கிய காரணம்.
எலும்புகளை வலுப்படுத்த வைட்டமின் டி, கால்சியம்,புரதம் நிறைந்த உணவுகள் உடலுக்கு அவசியம்.
கால்சியம் நிறைந்த உணவுகளில் முக்கியமானவை பால்,தயிர்,சீஸ்,கீரை வகைகள்,கருப்பு எள், கருப்பு உளுந்து,பிரண்டை, சோயாபீன்ஸ்,கொழுப்பு நிறைந்த மீன் வகைகள், அத்திப்பழம்,ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவைகளிலும்,
விட்டமின் டி நிறைந்த உணவுகள்- முட்டை, காளான், மத்தி, சால்மன் போன்ற மீன்களிலும் நிறைந்து உள்ளது.
நமது அன்றாட உணவில் போதுமான அளவு கால்சியம் விட்டமின் டி பாஸ்பரஸ் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை சிறுவயதிலிருந்தே எடுத்துக்கொள்ளும் போது எலும்பு தேய்மானத்தை தள்ளிப்போடலாம்.
பிரமிக்க வைக்கும் பிரண்டை

கிராமப்புறங்களில் கள்ளிசெடியிலும் வேலிகளருகிலும் அண்டி கிடக்கும், பெரும்பாலும் ஆடு மாடுகள் இதை சீண்டுவதில்லை என்றால் மனிதர்களும் சீண்டாமல் தான் இருந்தார்கள். தற்போது இதன் மகத்துவத்தை அறிந்து அதை நாட, அண்மைக் காலங்களில் நகர்புற சந்தைகளில் பார்க்க முடிகிறது கட்டு 30 50 என்று விற்கிறார்கள்.
இதற்கு தற்போது ஏற்பட்டுள்ள பெருமளவிலான உடல் பிரச்சினையும் விழிப்புணர்வும் மக்களை இயற்கை நோக்கி நகர்த்தி உள்ளது. பிரண்டை மிகச்சிறந்த எலும்பை வலுவாக்கக்கூடிய கால்சியம் நிறைந்துள்ள தாவரம் , எலும்பின் அடர்த்தியை அதிகரித்து வலு சேர்க்க வல்லது.
எலும்பு முறிவு எலும்பு தேய்மானம் சரிசெய்யவும் மூட்டு முட்டி வலியை குறைக்கவும் பிரண்டையை விட சிறந்த நிவாரணம் தரும் நிவாரனி இல்லை என்கிறது சித்த மருத்துவம்.
அதுமட்டுமின்றி செரிமான பிரச்சனை அதிகளவில் உள்ளவர்கள் பிரண்டையுடன் இஞ்சி சமஅளவு சேர்த்து துவயலாக சூடான சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிட செரிமானம் மண்டலம் சீராகிறதாம்.
மெனோபாஸை நெருங்கும் பெண்கள் , மெனோபாஸ்க்கு பிறகும் ஏற்படக்கூடிய இடுப்பெலும்பு வலிக்கு ஆக சிறந்ததாம், அதுமட்டுமின்றி வயிற்றுப்புண், வாய்ப் புண், இரத்த சோகை, நரம்பு தளர்ச்சி, மூல நோய் போன்றவற்றையும் ஆற்றக்கூடியது என்கிறார்கள்.
உடம்பில் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் தவிர்ப்பதற்கும்,சேர்ந்த கொழுப்பால் இதயத்தில் அடைப்பை தவிர்க்கவும், மூச்சு திணறலை சரி செய்யவும் பிரண்டை சகலரோக நிவாரணி.
பிரண்டையில் பலவிதமான உணவுகள் தற்போது செய்கிறார்கள் பிரண்டை இட்லி பொடி, பிரண்டை சட்னி, பிரண்டை தோசை, பிரண்டை குழம்பு, பிரண்டை ஊறுகாய், பிரண்டை சூப் என நீள்கிறது பட்டியல், ஆனால் நம் பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து செய்து வருவது பிரண்டை துவையலும் பிரண்டை குழம்பு தான்.
ஆரோக்கியமும் சுவையும் குறையாத பிரண்டை துவையல்.
செய்ய தேவையான பொருட்கள்
பிரண்டை -2 கப்
இஞ்சி பிரண்டையில் -1/4 அளவு
பச்சை மிளகாய்-3 காரத்திற்கு ஏற்ப
புளி-பெரிய நெல்லிகாய் அளவு
உப்பு-தேவைக்கேற்ப
வெல்லம்-சிறிதளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய்
கடுகு
உளுத்தம்பருப்பு
செய்முறை

பிரண்டையை சுத்தம் செய்து இஞ்சியையும் தோல் நீக்கி இரண்டையும் சிறியதாக நறுக்கிக்கொண்டு, வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பிரண்டையை மட்டும் முதலில் வதக்கி அதை இறக்கும் போது இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து ஒரு வதக்கு வதங்கியதும் இதனுடன் புளி உப்பு வெல்லம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்சியில் நைசாக அரைத்தெடுத்ததை வாணலியில் தாளித்து அதில் அரைத்த விழுதை சேர்த்து துவையல் சூடானதும், இறக்கி சூடான சாதத்துடனோ அல்லது இட்லி தோசை தயிர் சாதத்திற்கோ அருமையான துவையல் தயார்.
குறிப்பு
கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலம் முழுவதும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது ஏனெனில் இதில் அதிகளவில் கால்சியம் ஆக்சலேட்டு இருப்பதால் சிறுநீரக கற்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, உடல் அலர்ஜி, உடல் சூடு, தலைவலி, உள்ளவர்களும் உடல்நிலையை பொறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}