உடம்பு சரியில்லையா.. பேசாம சத்து மாவு கஞ்சி சாப்பிடுங்க.. செய்வதும் சுலபம்.. ஹெல்த்தியும் கூட!

Dec 23, 2025,03:41 PM IST

- சுமதி சிவக்குமார் 


சின்ன சேலம்: உடம்பு சரியில்லாதவர்களுக்கு இந்த சத்து மாவுக் கஞ்சி மிக மிக நல்லது. சாதாரண நாட்களிலும் கூட இதை சாப்பிடலாம். உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது மட்டுமல்லாமல், எடைக் குறைப்புக்கு முயற்சிப்பவர்களும் கூட இதை சாப்பிடலாம். நல்ல பலன் கொடுக்கும்.


சத்து மாவு இனிப்பு கஞ்சி எப்படி செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:




கருப்பு கவுனி அரிசி 100 கி

கருப்பு உளுந்து 100 கி

பாசி பருப்பு 100 கி

கொள்ளு 100 கி

கம்பு 100 கி

கேழ்வரகு 100 கி

மக்கா சோளம் 100 கி

சிவப்பு சோளம் 100 கி

முந்திரி 100 கி

பாதாம் 100 கி

ஏலக்காய் 20 ரூபாய் 

சுக்கு 10 ரூபாய் 


செய்முறை:


ஒவ்வொரு தானியத்தையும் எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் வறுத்து கொள்ளவும். முந்திரி பாதாம் ஏலக்காய் சுக்கு அப்படியே சேர்த்து அரைப்பு மிஷினில் தந்து நைசாக அரைத்து கொள்ளவும். 


அரைத்த மாவில் இரண்டு கரண்டி எடுத்து மூன்று டம்ளர் தண்ணீர் கலந்து கரைக்கவும்.


மாவு கரைத்த பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி கைவிடாமல் ஸ்மில் வைத்து கிளறவும். மாவு வெந்து கஞ்சி கெட்டியாகும். இப்போது நாட்டுச் சர்க்கரை சேர்த்து இறக்கி விடவும். ருசிக்காக தேங்காய் துருவல் சேர்க்கலாம். உடலுக்கு சத்தான புத்துணர்வு தரும் கஞ்சி இது. பருகி பாருங்கள்...!!


(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?

news

விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு

news

நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்

news

உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

news

செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!

news

பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?

news

பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!

news

சரியான முடிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்