- ச.சித்ராதேவி
திருநெல்வேலி: பனிக் காலம் தொடங்கி விட்டது.. மார்கழி மாசமும் வந்தாச்சு.. மார்ச்சளி பிரச்சினையும் இனி தலைவிரித்தாடும். இந்த பனிக் காலத்தில் ஏற்படும் இருமல், சளி. மூக்கில் நீர் ஒழுகுதல், மூக்கு அடைப்புக்கு பாட்டி வைத்தியம் பார்த்து உடம்பை பாதுகாக்கலாம்.
இதையெல்லாம் மருந்துன்னே சொல்ல முடியாது.. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களைத்தான் நமது முன்னோர்கள் மருந்தாகவும் பயன்படுத்தியுள்ளனர். அதைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
பூண்டு சூப்
தேவையான பொருட்கள்

சின்ன பூண்டு 15
சின்ன வெங்காயம் 15
சின்ன தக்காளி 1
இதில் பூண்டு வெங்காயம் லேசாக தட்டி இரண்டு டம்ளர் தண்ணீர் கலந்து மிதமான சூட்டில் வேக வைத்து ஒரு டம்ளராக வந்தவுடன் சூடு தாங்கும் அளவில் குடிக்க வேண்டும். வெற்றிலையில் மூன்று மிளகு கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடலாம்.
இதேபோல தூதுவளை இலை துளசி வெற்றிலை சாறு எடுத்து காலை மாலை குடித்து வரலாம். அதுவும் நன்றாக கேட்கும்.
மிளகு 100கி
சுக்கு 50கி
அதிமதுரம் 15கி
திப்பிலி 10கி
சித்தரத்தை 10கி
லவங்கப்பட்டை 5கி
ஏலக்காய் 5
தாளிசபத்திரி10 கி
எல்லாப் பொருள்களையும் நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு 1/2கரண்டி வெந்நீரில் கலந்து குடிக்க லாம்.தேனிலும் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
சளி இல்லாத வறட்டு இருமலுக்கு கடுகை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் உடனே கேட்கும். சித்தரத்தை சிறு துண்டு வாயில் போட்டு எச்சில் மட்டும் விழுங்கியும் வரலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பொருட்கள் தான்.
(இதுபோன்ற மருத்துவத்தை எடுத்துக் கொள்ளும்போது உரிய ஆலோசனைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது. ச.சித்ரா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}