சென்னை: எப்போதும் அரிசியே சேர்க்காமல் அவ்வப்போது சிறு தானியங்களையும் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது. அந்த வகையில் குதிரைவாலி அரிசி பாசிப் பருப்பு பொங்கல் செய்து சாப்பிட்டால் செம டேஸ்ட்டாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி ஒரு கப்
பாசிப்பருப்பு ஒரு கப்
சீரகம் மிளகு தலா ஒரு ஸ்பூன்
பூண்டு ஆறு பல் உரித்தது
நெய் ஒரு ஸ்பூன்
முந்திரி பத்து
கருவேப்பிலை ஒரு கொத்து
மா இஞ்சி சிறிதளவு பொடியாக கட் செய்தது
பெருங்காயம் சிறிதளவு
பச்சை மிளகாய் இரண்டு
உப்பு தேவைக்கு ஏற்ப
செய்முறை

1. குதிரைவாலி அரிசி பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. குக்கரில் நான்கு கப் தண்ணீர் ஊற்றவும். குதிரைவாலி அரிசி& பாசிப்பருப்பு சேர்க்கவும். (குறிப்பு: அரிசியை எந்த கப்பில் அளந்தோமோ அதே கப்பில் தண்ணீர் ஊற்றவும்)
3.பிறகு பூண்டு, சீரகம் ,மிளகு, பெருங்காயம், பச்சை மிளகாய் ,சிறிது கருவேப்பிலை சேர்க்கவும்
4. மூன்று விசில் வந்ததும் , குக்கர் பிரஷர் அடங்கிய பிறகு, நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து, பொங்கலில் கலக்கி இறக்கவும். சுவையான குதிரைவாலி பொங்கல் ரெடி.
சட்னி : மா இஞ்சி மல்லித்தழை சட்னி செய்ய தேங்காய் துருவல் ஆறு ஸ்பூன், மூன்று ஸ்பூன் வறுகடலை, பச்சை மிளகாய் 3, மா இஞ்சி ஒரு துண்டு, மல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு ,உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைக்கவும். நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, சீரகம் போட்டு தாளிக்கவும்.
அருமையான மாஇஞ்சி மல்லித்தழை சட்னி& குதிரைவாலி அரிசி பொங்கலுடன் சாப்பிட ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும் .ஹெல்தியான உணவும் கூட.
அனைத்து வயதினரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கர்ப்பிணி பெண்கள் டயாபடீஸ் இருப்பவர்கள் அனைவருக்கும் அருமையான உணவு. நல்ல பில்லிங்கான சுவையான பொங்கல் செய்து பாருங்கள் பிரண்ட்ஸ்
மேலும் இது போன்ற சுவையான ரெசிபிகளுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}