Summer Tips.. வெயிலிலிருந்து தப்பி.. புத்துணர்ச்சி கொடுக்கும் லெமன் புதினா டீ!

Mar 10, 2025,01:06 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை:  சம்மர் வந்தாச்சு.. கோடைகாலம் வந்தாலே கடுப்பாக இருக்கும். இந்த மழையைக் கூட சமாளித்து விடலாம்.. ஆனால் வெயிலை சமாளித்து ஜூன் ஜூலைக்கு வந்து சேருவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். சில நேரங்களில் ஆகஸ்ட், செப்டம்பரிலும் கூட வெயிலடித்து கடுப்படிக்கும்.


சரி அதை விடுங்க.. இப்ப வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம் என்பது குறித்துப் பார்ப்போம். இது வெயிலுக்கு மட்டும் இல்லைங்க, சாதாரண நாட்களிலும் கூட நாம பாலோ பண்ணலாம்.. அதுதாங்க லெமன் புதினா டீ.


லெமன் புதினா டீ உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. இயற்கையான டீயும் கூட. 




தேவையான பொருட்கள்:


2 கப் தண்ணீர்

டீ தூள் 1/2 ஸ்பூன்

எலுமிச்சம் பழம் பாதி அளவு

புதினா இலை ஆறு

சர்க்கரை அல்லது தேன் தேவைக்கு ஏற்ப


செய்முறை:


அ. ஒரு பேனில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் டீ தூள் போடவும்

ஆ. வேண்டுமெனில் ஏலக்காய் 2 தட்டி கொண்டு  சேர்க்கவும்

இ. தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஈ. அதனை வடிகட்டி, பிறகு எலுமிச்சம் பழம் பிழிந்து விடவும். தேவைக்கு சர்க்கரை அல்லது தேன் சேர்க்கவும்.

உ. 6 புதினா இலைகள் சேர்த்து மூடி வைக்கவும்

ஊ. புதினா நறுமணத்துடன் இந்த டீ பருக அருமையாக இருக்கும்.


பயன்கள்:


1.உடல் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

2. உடலை ஹைட்ரேட் செய்கிறது.

3. உடல் எடை   இழப்பிற்கு உதவுகிறது.

4. கலோரிகள் குறைவாக உள்ளது.

5. தேயிலையில் உள்ள  ஆக்சிஜனேற்றிகள் மாசுபடுத்திகளை அகற்றுகிறது.

6. வெப்பம் அதிகமாக உள்ளதால் தாகம் நிறைய உண்டாகும். இதனை பருகினால் தாகம் தணிப்பதன் மூலம் சுறுசுறுப்பாக உடலை வைத்துக் கொள்ளலாம். புத்துணர்ச்சி உருவாகும்.

7.மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துகிறது.

8. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால்  உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு முக்கியமாக உள்ளது.

9. ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இருமுறை லெமன் டீ புதினா உடன் சேர்த்து சர்க்கரை இல்லாமல் குடிக்க ,செரிமானம் மேம்படும்.

10. மலச்சிக்கலை குறைக்கும் ,உடலை சரியாக செயல்பட வைக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு.. மைக் ஆப் செய்யப்பட்டதாகவும் பரபரப்பு புகார்!

news

ஆளுநர் உரையை வாசிக்காமல் முரண்டு பிடிப்பது நல்லதல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி.வெளியேறியது ஏன்?.. ஆளுநர் மாளிகை விளக்கம்

news

ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு

news

பொறுப்பேற்றதும் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய பாஜக நிதின் நபின்

news

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!

news

கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்

news

அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!

news

யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை

அதிகம் பார்க்கும் செய்திகள்