- ஸ்வர்ணலட்சுமி
உளுத்தம் கஞ்சி ஒரு பாரம்பரிய தமிழ்நாட்டில் விரும்பி உண்ணும் ஒரு உணவு .உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் வலிமைக்கும், பெண்களுக்கு மாதவிடாய் கால பிரச்சனைகளை சமாளிக்கவும் ,கருப்பை ஆரோக்கியத்திற்கும் மிகச் சிறந்த உணவு.
உளுத்தம் கஞ்சியை எளிமையாக எப்படி? செய்யலாம் என்பதை பார்ப்போம் வாங்க ஃபிரண்ட்ஸ் கிச்சனுக்குள் போகலாம்...
தேவையான பொருட்கள்:
1.வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு கப்
2 .ஏலக்காய் - 3
3 .பனைவெல்லம் பொடி செய்தது - ஒரு கப் (குறிப்பு: நாட்டு சக்கரை அல்லது குண்டு வெல்லம் அல்லது பனங்கற்கண்டு பயன்படுத்தலாம்).
4. தேங்காய் துருவல் நான்கு ஸ்பூன்
5 .வெந்தயம் - 1 ஸ்பூன்
செய்முறை:
1 .உளுத்தம் பருப்பை வெந்தயத்துடன் சேர்த்து நன்றாக கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பிறகு ஊறிய உளுத்தம் பருப்பை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
3 .அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் அரை கப் ஊற்றி அரைத்த பருப்பை அதில் சேர்த்து நன்றாக கிளறவும். கைவிடாமல் கிளற வேண்டும் இல்லையேல் அடி பிடித்து விடும்.
4 .ஏலக்காய் தட்டி பொடி செய்து சேர்க்கவும். பிறகு பனைவெல்லம் பொடி செய்தது சேர்த்து நன்றாக கிளறவும் .பருப்பு நன்றாக பொங்கி நுரை கட்டி வரும் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
5. கஞ்சி நன்றாக வெந்து வந்தவுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
பிறகு இதனை சர்விங்க் பவுலுக்கு மாற்றி பரிமாறவும்.
மிகவும் டேஸ்ட்டான கமகமவென மணக்கும் உளுத்தம் கஞ்சி தயார். இதனை சூடாக உட்கொள்ள சூப்பராக இருக்கும். உளுத்தம் கஞ்சி உட்கொள்வதனால் இத்தனை நன்மைகளா!... வாங்க பிரண்ட்ஸ் பார்ப்போம்....
நன்மைகளைப் பற்றி அறிந்து கொண்டு உட்கொள்வதனால் அதிக மகிழ்ச்சி தரும் இல்லையா?...
1. உளுத்தம் கஞ்சி தொடர்ந்து சாப்பிட்டு வருவதனால் உயிர் அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
2. இதில் உள்ள மலமிளகும் பண்பு மலச்சிக்கலை போக்க பெரிதும் உதவுகிறது.
3. இடுப்பு ,முதுகு ,கை ,கால் மற்றும் மூட்டு வலிகளை போக்க உதவுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு சிறந்த பூஸ்டர் டானிக்காக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
4. இதில் உள்ள நார்ச்சத்து இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது .சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இனிப்பு அளவை குறைத்துக் கொடுக்கலாம்.
5. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிரமத்தில் இருந்து குறைப்பதற்கும், கருப்பையை வலுப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.
6. எலும்புகளை பலப்படுத்தவும், சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகளை அகற்றவும் பெரிதும் உதவுகிறது.
7. அடிக்கடி உடம்பு சோர்வடைந்து இருப்பவர்களுக்கு இது ஒரு சுறுசுறுப்பு அளிக்கும் கஞ்சி.
8. ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
9. இரும்புச்சத்து நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்தது
10. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .உடல் வலுவடையவும் ,சருமம் பொலிவு பெறவும் உதவுகிறது.
குறிப்பு :இட்லிக்கு மாவு அரைக்கும் போது சிறிது வெள்ளை உளுத்தம் பருப்பு அதிகம் ஊறவைத்து ,அரைத்து அதில் இருந்து ஒரு கப் எடுத்தும் உளுத்தம் கஞ்சி செய்யலாம். இனிப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.)
மேலும் இது போன்ற பயனுள்ள ரெசிபிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!
எலிகள் செய்யும் பூஜை.. விநாயகரின் செம டான்ஸ்.. ஏஐயில் கலக்கும் பிள்ளையார் வீடியோக்கள்!
காதலிப்பதாக இருந்தால்.. இதயம் முரளி மாதிரி இருக்காதீங்க.. சீனத்து லியூ போல போட்டு உடைச்சிருங்க!
பிள்ளையாரை வழிபட சிறந்த நைவேத்தியங்கள் என்னென்ன.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்
அன்புள்ள அம்மா.. அருமையான அப்பா!
ஜம்மு காஷ்மீரை உலுக்கி எடுத்த கன மழை.. வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற 5 பக்தர்கள் பலி
தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு
திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?
{{comments.comment}}