சென்னை: வரகு அரிசி குழிப் பணியாரம் சாப்பிட செம டேஸ்ட்டியானது. அத்தோடு சத்தானதும் கூட. செய்வதும் சுலபமானது. செஞ்சு பார்க்கலாமா, வாங்க!
தேவையான பொருட்கள்
வரகு அரிசி ஒரு கப்
இட்லி அரிசி ஒரு கப்
பச்சரிசி அரை கப்
உளுத்தம் பருப்பு அரை கப்
வெந்தயம் இரண்டு ஸ்பூன்
பெரிய வெங்காயம் 2 பொடியாக கட் செய்யவும்
பச்சை மிளகாய் 3 பொடியாக கட் செய்யவும் காரம் தேவைக்கு ஏற்ப
தாளிக்க தேவையானவை: கடுகு ,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மல்லித்தழை, நல்லெண்ணெய்.
செய்முறை

1 .வரகு அரிசி இட்லி அரிசி பச்சரிசி உளுத்தம் பருப்பு வெந்தயம் இவை அனைத்தும் நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊறிய அனைத்தையும் மிக்ஸி ஜாரில் நைசாக அரைக்கவும்.
3.கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போடவும் .கடுகு வெடித்து வந்ததும் உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, சீரகம், பச்சை மிளகாய், போட்டு நன்றாக வதக்கவும்.
4.கருவேப்பிலை மல்லித்தழை போடவும்.
5.தாளித்த இவை அனைத்தையும் நைசாக அரைத்த பணியாரம் மாவில் போடவும்.
6.நன்றாக கலக்கி பணியார கல் அடுப்பில் வைத்து, சூடான பின்பு சிறிது நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஊற்றி, சிறிய குழி கரண்டியில் மாவை பணியாரக் கல்லில் ஊற்றவும்.
7. ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு அதனை மெதுவாக திருப்பி போடவும்
8.சூப்பரான, சுவையான, ஹெல்தியான, கிரிஸ்பியான வரகு அரிசி பணியாரம் ரெடி.
9. இதற்கு தேங்காய் மல்லி சட்னி அல்லது வறுகடலை சட்னி வைத்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த உணவு காலை சிற்றுண்டி, இரவு நேர உணவிற்கும் இந்த வரகு அரிசி பணியாரம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
வேலைக்கு செல்பவர்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுத்த அனுப்ப இது உகந்த உணவு.
நீங்களும் இந்த வரகு அரிசி குழிப்பணியாரம் செய்து சுவைத்து பாருங்கள் .மேலும் தொடர்ந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}