- சுதாகரி
அப்பா பசிக்கிறது
தவமிருந்து பெற்ற மகளின் குரல்..
மனதில் உள்ளதை
மறைக்காமல் சொல்ல
ஈன்ற தாயும் இல்லாத
பத்து வயது சிறுமியவள்...
மகளின் பசிக்குரல்
தந்தையின் மனதை பிசைய
இருவரும் கைகோர்த்து
அடைந்தனர் ஓர் அங்காடியை!
பரபரப்பில்லாத பகல் பொழுது அது ...
அங்காடியிலும் கூட்டம் குறைவு ...
சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டே ...
கொடுத்திருந்த மகளின் கையை சற்றி விலக்கி ...
சடுதியில் அங்கே வைத்திருந்த
ரொட்டி பாக்கெட்டை எடுத்துக் கொண்டே திரும்பிய தந்தையை
தடுத்து நிறுத்தியது
கடை முதலாளியின் குரல்!
நடுங்கும் கைகளுடன்...
பதைத்த உள்ளத்துடன்...
கூனிக்குறுகிய தந்தை
சற்றே திரும்ப...
மகளோ நடந்தது அறியாமல்
பேதை மனதுடன்...
பசித்த வயிற்றுடன்...
தந்தையை பார்க்க...
தந்தையோ கடைக்காரரை பார்க்க...
கடைக்காரர் கையை அசைத்து
மகளை அழைத்தார்...
அம்மா இங்கே வா!
கொடுத்த பணத்திற்கு
மீதியை பெறாமல்
செல்கின்றீரே என்று சொல்லி
சிறிது பணத்தை குழந்தையின்
கைகளில் திணித்தார் ...
அந்த அன்பு உள்ளம் கொண்டவர்!
திருட்டில் கூட நியாயம் கண்டு
தந்தையின் பெருமையை குலைக்காமல்
முகத்தில் கடுமையை காட்டாமல்
அடுத்த வேலைக்கு வழிகாட்டிய
அந்த அன்பு உள்ளத்தை என்ன சொல்ல?
கடைக்காரரை வாழ்த்திய படியே
கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு
படியிறங்க எத்தனிக்கையில்
ஐயா நில்லுங்கள்!
கடையின் உள்ளிருந்து ஒரு குரல்!
ஒன்றும் புரியாமல்
திரும்பிய அவரிடம்
மூச்சிறைக்க
கையில் ஒரு மூட்டையுடன்
ஓடி வந்தார் வாடிக்கையாளர்...
வாங்கிய அரிசியை விட்டுவிட்டு செல்கின்றீரே!
பதில் எதுவும் சொல்லும் முன்
திணிக்கப்பட்டது அரிசி மூட்டை!
வேண்டியவருக்கு நியாயமானதை
உணர்ந்து ஈயும் பண்பு!
இறைவா அது உன் செயல் அல்லவா?
மனிதன் இன்னும் சாகவில்லை!
தூணிலும் துரும்பிலும்
காணும் இடமெங்கிலும்
நீக்கமற நிறைந்திருக்கும்
நீயும் பொய்யில்லை!
இல்லாதவர்க்கு ஒன்றை வழங்கும் போதும்
வருத்தமுற்றோரிடம் அன்பு காட்டும் போதும்!
துன்ப கண்ணீரை துடைத்து
இன்பத் தோணியில் ஏற்றும் போதும்!
ஈடில்லா இறைவா! அங்கே
உன் உருவம் பெறுகின்றான்!
மனிதனும் தெய்வமாகின்றான்!
அன்புக்கு பஞ்சமில்லை
மனிதநேயமும் மறையவில்லை!
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}