மனைவிக்கு பிறந்த வீட்டார் தரும் சீதனத்தில்.. கணவனுக்கு உரிமை இல்லை.. உச்சநீதிமன்றம் பொளேர்!

Apr 27, 2024,05:11 PM IST

டெல்லி: மனைவிக்கு அவரது வீட்டின் சார்பில் சீதனமாக வழங்கப்படும் சொத்தில், கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னர் எல்லாம் திருமணம் என்பது இரு மனங்கள் சம்மந்தப்பட்டது என்று கூறி வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் திருமணத்தில் முக்கிய பங்காக வரதட்ணை உள்ளது. யார் அதிகளவில் வரதட்சணை தருகிறார்களோ அதை வைத்து தான் இன்றைய பெரும்பாலான திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. இவ்வாறாக நடைபெறும் திருமணங்களில் கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள்  அதிகரிக்கின்றன.  இதன் காரணமாக விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்து வருகின்றன. 


இப்படிப்பட்ட நிலையில், ஒரு முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:




2009ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்த போது, பெற்றோர்களால் எனக்கு சீதனமாக வழங்கப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான நகைகளை எனது கணவர் எடுத்துக் கொண்டார். அதை திருப்பித் தர உத்தரவிட  வேண்டும் என்று கூறி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரியான ஆதாரங்கள் இல்லை என்று தீர்ப்பளித்து எனது கோரிக்கையை நிராகரித்து விட்டார். அந்த தீர்ப்பை ரத்து செய்து எனக்கு எனது சீதன நகையை திரும்ப தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். 


அந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா ஆகியோர் விசாரித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பின்னர் பிறப்பித்த உத்தரவில், மனைவி சீதனமாக எடுத்து வரும் சொத்து, கணவரின் சொத்தாக மாறாது. அதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மாறாக, அவசர தேவைக்கு அந்த சொத்தை அவர் பயன்படுத்தியிருந்தால், அதை திருப்பி தர வேண்டியது கணவரின் தார்மீக கடமையாகும்.

இந்த வழக்கில், பெண்ணின் நகைகளை பயன்படுத்திய கணவர் , அதற்கு ஈடாக ரூ.25 லட்சம் மனைவிக்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தத் தீர்ப்பு பெண்களுக்கு மிகப் பெரிய உத்வேகம் அளிக்கும் என்று தெரிகிறது. மனைவி என்ற ஒரே காரணத்துக்காகவே பெண்களை அடிமைப்படுத்தி அவர்களது பணம், நகை, உழைப்பு, சொத்து என எல்லாவற்றையும் உறிஞ்சிக் குடிக்கும் கணவர்களுக்கு இது சம்மட்டி அடியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்