சுகர் பக்கம் தலை வச்சுக் கூட படுக்கக் கூடாது.. அதுக்கு??.. பார்ரா!

Aug 25, 2023,04:35 PM IST
- மீனா

சென்னை: வேலையெல்லாம் பார்த்து ரொம்ப டயர்ட் ஆகிட்டீங்களா.. கவலையை விடுங்க பாஸ்.. கலகலன்னு உங்கள சிரிக்க வைப்பதற்காகவே சுடச் சுட நறுக்குன்னு நாலு ஜோக்கோட வந்திருக்கோம்.. வாங்க ஜாலியா சிரிச்சுட்டு இந்த நாளை இனிமையா முடிப்போம்.



நபர் 1: என் உறவினர் ஒருத்தர் ரொம்ப முடியலன்னு சொல்லி டாக்டர்  கிட்ட போய் செக் அப் பண்ண போனாரு.
நபர் 2: அப்படியா டாக்டர் என்ன சொன்னாரு?
நபர் 1: உங்களுக்கு சுகர் இருக்குது .இனிமேல் சுகர் பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார்  .
நபர் 2: பாவம் . அப்புறம் என்ன பண்ணாரு?
நபர் 1: அதனால சுகர் டப்பாவை கால் கீழே வைத்து தான் படுக்கிறார்

--

கணவன்: எப்ப பாரு ஏதாவது பங்ஷனுக்கு போனா புது புது நகையா கேக்குற பழைய நகையை போட்டு போனா என்ன?
மனைவி: நம்ம சொந்தக்காரங்க ஃபங்ஷனுக்கு ஒரே நகையா போட்டு போனா உன் கணவர் வேற வாங்கி தர மாட்டாரான்னு கேக்குறாங்க. உங்க பேரு கெட்டுடக் கூடாதுல்ல.. அதனாலதான், புது நகை கேட்கிறேன்
கணவன்: என்னையும் தான் கேக்குறாங்க அதுக்கு நான் என்ன பண்றது.
மனைவி: உங்களை என்ன கேக்குறாங்க நீங்க தான் எந்த நகையுமே போட மாட்டீங்களே.
கணவன்: அது இல்ல, எல்லா ஃபங்ஷனுக்கும் ஒரே மனைவியையே கூட்டிட்டு வரேனு கேக்குறாங்க. அதுக்காக  ஒவ்வொரு ஃபங்ஷனுக்கு ஒவ்வொரு கல்யாணமா பண்ண முடியும்.
மனைவி:😡



--

மனைவி: கல்யாணம் ஆன புதுசுல நீங்க என்னை பால்கோவா, ரசகுல்லா, பாசந்தி அப்படின்னு என்னை பாசமாக கூப்பிடுவீங்க .
கணவன்: ஆமா , இப்ப என்ன அதுக்கு?
மனைவி: இப்ப எல்லாம் நீங்க அந்த மாதிரி என்னை கூப்பிடுறது இல்லையே .
கணவன்: அதுக்கு எல்லாம் எக்ஸ்பயரி டேட்னு  ஒன்னு இருக்குன்னு தெரியாம கூப்பிட்டேன்மா. மன்னிச்சிரும்மா.
மனைவி: என்னாது 😡



--

ரமேஷ்: ஒருத்தர் ரொம்ப நாள் பார்க்காமல் இருந்த தன் நண்பன் வீட்டுக்கு போறாரு
சுரேஷ்: சரி போய் என்ன பண்ணாரு?
ரமேஷ்: அவர் நண்பர் வீட்டுல தண்ணி பற்றாக்குறையினால் போர்வெல் போட்டுக்கிட்டு இருந்தாங்க. உடனே இவரு தன் வாட்சை கழட்டி குழிக்குள் போட்டுட்டார்.
சுரேஷ்: வாட்ச் ஏன் போட்டாரு?
ரமேஷ்: ஏன்னா கடைக்காரன் சொன்னானா இது வாட்டர் ப்ரூப் வாட்ச் என்று அதான் தண்ணி இருக்கா இல்லையா என்று ப்ரூவ்  பண்னுமுனு போட்டாராம்.

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்