அல்லு அர்ஜூன் கைது.. அடுத்தடுத்து திருப்பம்.. இடைக்கால ஜாமின் வழங்கியது தெலங்கானா ஹைகோர்ட்

Dec 13, 2024,05:49 PM IST

ஹைதராபாத்: புஷ்பா 2 பட ரிலீஸின்போது ஹைதராபாத்தில் உள்ள தியேட்டரில் ஏற்பட்ட மிகப் பெரிய கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் இறந்த விவகாரத்தில், பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க நம்பள்ளி கோர்ட் உத்ததரவிட்டது. இருப்பினும் தற்போது அவருக்கு இடைக்கால ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது தெலங்கானா உயர்நீதிமன்றம்.


நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா 2. இப்படம் மிகப் பெரிய ஹைப்புக்கு மத்தியில் வெளியானதால் தியேட்டர்களில் மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பிரபல சந்தியா தியேட்டருக்கு திடீரென அல்லு அர்ஜூன் விஜயம் செய்தார். அவரது வருகையைத் தொடர்ந்து அவரைப் பார்க்க கூட்டத்தினர் முண்டியடித்தனர். ஆயிரக்கணக்கில் கூடியிருந்த ரசிகர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு அவரைப் பார்க்க முயன்றதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.




இதில் ரேவதி என்ற பெண் சிக்கிக் கொண்டார். கூட்ட நெரிசலில் சிக்கி மிதிபட்ட அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகனும் இதில் காயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அல்லு அர்ஜூன் வருகை குறித்து முன்கூட்டியே காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தேவையான முன்னேற்பாடுகளை தியேட்டர் நிர்வாகம் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் சிந்தியா தியேட்டர் உரிமையாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அல்லு அர்ஜூன் மீதும் போலீஸார் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து இன்று அவரிடம் ஹைதராபாத் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.


அதன் பின்னர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவருக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகளை நடத்தினர். அதன் பின்னர் நம்பள்ளி கோர்ட்டில் அல்லு அர்ஜூன் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் அவரை 14 நாள் சிறைக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஜாமின் கோரி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜூன் சார்பில் ஜாமின் கோரி மனு செய்யப்பட்டது. இதை விசாரித்த ஹைகோர்ட், அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமின் அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து  சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜுன் தற்போது விடுதலையாகவுள்ளார்.


நாடு முழுவதும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜூன் விவகாரம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, அல்லு அர்ஜூன் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாகவும், அவரை விடுவிக்குமாறும் இறந்த பெண்ணின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஏற்கனவே ஹைதராபாத்தில் நடிகர் மோகன்பாபு பத்திரிகையாளர்களை வெறித்தனமாக தாக்கி சர்ச்சையை ஏற்படுத்தினார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!

news

2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!

news

2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்

news

2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்

news

இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!

news

2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!

news

அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!

news

பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்

news

தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்