புதிய தலைமுறை விவாதத்திற்கு நான் போகவில்லை.. நாராயணன் திருப்பதி அறிவிப்பு

Jan 05, 2023,11:38 AM IST

சென்னை: புதிய தலைமுறை விவாத நிகழ்ச்சிக்கு தான் போகப் போவதில்லை என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி  அறிவித்துள்ளார்.


சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது அவருக்கும், புதிய தலைமுறை செய்தியாளர் முருகேசனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மோதலைத் தொடர்ந்து, புதிய தலைமுறை விவாதத்திற்கு நாராயணன் திருப்பதி வருவார் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.


இந்த சவாலை புதிய தலைமுறையும் ஏற்றுக் கொண்டது. ஆனால் தற்போது அதில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு தான் போகப் போவதில்லை என்று நாராயணன் திருப்பதி  அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்:




நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் @PTTVOnlineNews  தொலைக்காட்சியின் அழைப்பை ஏற்று பி ஜி ஆர் முறைகேடுகள் குறித்த ஆவணங்களை வெளியிட்டு அது குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை   என்னை  பணித்திருந்தார். இன்று மாலை  7மணிக்கு நேரலையில் இந்த நிகழ்ச்சியை (ஒளிபரப்புவதாக புதிய தலைமுறையின் ஆசிரியர் என்னிடம் கூறியிருந்த நிலையில், திடீரென்று நேற்று இரவு இந்த நேரலை நிகழ்ச்சியை நடத்த முடியாது என்றும், அதற்கு பதிலாக  இந்த விவகாரத்தில் மற்ற கட்சிகள் கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சியையே நடத்த புதிய தலைமுறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்றும் கூறினார்.

ஆனால், புதிய தலைமுறை செய்தியாளரின் சவாலை ஏற்று ஆவணங்களை வெளியிட்டு அது குறித்த விளக்கத்தை மக்களுக்கு அளித்த பின்னர் எந்த நிகழ்ச்சியையும் அவர்கள் நடத்தி கொள்ள நமக்கு மறுப்பேதும் இல்லை என்று நான் கூறினேன். ஆனால், மக்களிடம் நேரடியாக பி ஜி ஆர் முறைகேடுகள்
குறித்த விளக்கத்தை பாஜக அளிக்க புதிய தலைமுறை மறுத்து விட்டது.

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் புதிய தலைமுறையின் சவாலை ஏற்று கொண்டு ஆவணங்களை தயாராக வைத்திருந்தும், நான் நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராக இருந்தும், புதிய தலைமுறையின் இந்த மாற்றத்திற்கு காரணம் ஆளும் கட்சியின் அச்சுறுத்தலா அல்லது முறைகேடுகளை பாஜக அம்பலப்படுத்தி விடுமோ என்ற தயக்கமா என்பது புரியவில்லை. 

எது எப்படியிருந்ததாலும் லஞ்சம், ஊழல், முறைகேடுகளை தடுத்து ஒழிக்க  அண்ணாமலை அவர்களின் தலைமையில் நாம் உறுதியாக உள்ளோம்.  புதிய தலைமுறை தொலைக்காட்சி முறைகேடுகள் குறித்த ஆவணங்களை மக்களிடம் வெளிப்படுத்த தயாராக இல்லாததால் இன்றைய நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்