இந்தியாவுக்காக தொடர்ந்து போராடுவேன்.. எதற்கும் தயார்.. ராகுல் காந்தி ஆவேசம்

Mar 25, 2023,11:49 AM IST
சென்னை:  இந்தியாவின் குரலுக்காக தொடர்ந்து போராடுவேன்.. அதற்காக என்ன விலை கொடுக்க நேர்ந்தாலும் அதற்கும் நான் தயார்தான் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி வயநாடு எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான வழக்கின் தீர்ப்பு வெளியான அடுத்த நாளே அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டிருப்பது காங்கிரஸாரை கொந்தளிக்க வைத்துள்ளது.



ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்தைக் காப்போம் என்ற பெயரிலும் தேசிய அளவில் இயக்கத்தை நடத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் இதில் இணைத்து பிரமாண்டமான அளவில் இதை நடத்தவும் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் தனது தகுதி நீக்கம் குறித்து நேற்று இரவு டிவீட் ஒன்றைப்போட்டுள்ளார் ராகுல் காந்தி. அதில், நான் இந்தியாவின் குரலுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். இதற்கு எந்த விலை கொடுக்கவும் நான் தயார் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இந்த வழக்கில் அவர் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்டால் மட்டுமே ராகுல் காந்தியின் எம்.பி பதவி மீண்டும் கிடைக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்