துபாய்: கணவர் ஷேக் மனா பின் முகமது அல்மக்தூமை, இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் விவாகரத்து செய்துள்ளார் துபாய் இளவரசி ஷேகா மஹ்ரா.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகள்தான் ஷேகா மஹ்ரா. சர்வதேச அரசியலில் செல்வாக்கு பெற்றவர். உலகில் அதிக சொத்து உள்ள முதல் 10 அரச குடும்பத்தை சேர்ந்தவர்களில் அல் மக்தூமுக்கு தனி இடம் உண்டு. இவரின் 2 மகள்களுள் ஒருவர் ஷேகா மஹ்ரா. இவருக்கு வயது 30 ஆகிறது.
ஷேகா மஹ்ரா இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த தலைப்பில் பட்டம் பெற்றுள்ளார். ஷேகா மஹ்ராவுக்கும், அவரது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல்மக்தூமுக்கும் கடந்த ஆண்டு தான் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது, அதுவும் பிறந்து 2 மாதங்கள் தான் ஆகிறது.
இந்நிலையில்,ஷேகா மஹ்ரா கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால், உங்களை நான் விவகரத்து செய்வதை இன்ஸ்டாகிராம் மூலம் அறிவிக்கிறேன். உங்கள் உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி" என அவர் பதிவிட்டிருப்பது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
மேலும், இந்த அறிவிப்பை அடுத்து, இருவருமே தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் முன்னர் பதிவிட்டு இருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளனர். ஷேகா மஹ்ரா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழ், "நாங்கள் இருவர் மட்டும்" என்று எழுதி இருந்தார். இதற்கு இணையவாசிகள் எதற்காக இவர் இப்படி பதிவிட்டுள்ளார் என்று முனுமுனுத்து வந்த நிலையில், தற்போது எதற்கு என்பது உறுதியாகியுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}