வாஷிங்டன்: நான் உண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை வெறுக்கவில்லை. அவருடைய கருத்து, பார்வைகளில் எனக்கு உடன்பாடு இல்லை அவ்வளவுதான். அவர் என்னுடைய எதிரி அல்ல. அவருடைய பார்வை வேறு. என்னுடைய பார்வை வேறு என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்துப் பேசினார்.
ராகுல் காந்தி கூறுகையில், நான் உண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை வெறுக்கவில்லை. அவருடைய கருத்து பார்வைகளில் எனக்கு உடன்பாடு இல்லை அவ்வளவுதான். அவர் என்னுடைய எதிரி அல்ல. அவருடைய பார்வை வேறு. பாஜக வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முக்கிய கருத்தியல் வேறுபாடுகள் உள்ளன.
இந்தியா என்பது ஒரே கருத்தியல் என ஆர்எஸ்எஸ் நம்புகிறது. ஆனால், பல கருத்தியல்கள் சேர்ந்தது தான் இந்தியா என்பதை நாங்கள் நம்புகிறோம். சாதி வாரிய கணக்கெடுப்பு விவகாரம் என்பது மிகப்பெரிய விவகாரமும் அடிப்படை கேள்வியாகவும் உள்ளது.
நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்று இருந்தால் பாஜக 240 தொகுதிகளை நெருங்கியிருக்காது. அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள தேர்தலில் பாஜகவுக்கு எதிராக போராடி பெற்றி பெறுவோம். தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் விரும்பியது எல்லாம் செய்தது. பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் ஒருவிதமாகவும், பலமாக உள்ள மாநிலங்களில் ஒருவிதமாகவும் வடிவமைக்கப்பட்டன. எனவே அதை நான் நியாயமான தேர்தலாக கருதவில்லை. மாறாக அதை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தேர்தலாகவே கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}