கோவை: என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. இந்த நாட்டுக்கே நான்தான் பாதுகாப்பு. எனக்கு ஏன் பாதுகாப்பு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு பாதுகாப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதில் இரண்டு அல்லது மூன்று துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என மொத்தம் எட்டு முதல் 11 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இரண்டு கான்வே வாகனம் விஜய்யின் வாகனத்திற்கு முன்னும் பின்னும் பயன்படுத்தப்படும். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் விஜயின் வீடு, மற்றும் கட்சி அலுவலகம் அவர் செல்லும் இடம் என கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்க இருக்கின்றனர்.
விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு பின்னால் அரசியல் இருப்பதாக பல்வேறு கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசுகையில், தம்பி விஜய் வெளியில் வந்தால் அவருடன் அதிகமானோர் புகைப்படம் எடுக்க வருவார்கள். விஜய் போன்ற புகழ்பெற்ற நடிகருக்கு அது சிரமம் தான். அதனால் விஜய்க்கு தேவைப்பட்டிருக்கும், கேட்டு வாங்கியிருப்பார். இதனை பெரிதுபடுத்த தேவையில்லை.

விஜய்க்கு பாதுகாப்பு கொடுத்தால், அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்து விடுவாரா என்ன?... எனக்கு என் சொந்த நாட்டில் பாதுகாப்பு தேவையில்லை. நான்தான் நாட்டிற்கு பாதுகாப்பு.
ஓட்டு பிச்சை எடுக்க நீங்கள் பேசுகிறீர்களா? நான் பேசுகிறேனா? நான் மக்களுக்காகவே நிற்கிறேன். ஆனால் நீங்கள் தேர்தலை வாக்கு விற்கும் சந்தையாக மாற்றிவிட்டீர்கள். இதன்பின் கைகூலி, ஓட்டுப்பிச்சை என்று சொல்கிறார்கள். அண்ணாமலையின் பேச்சு அநாகரீகமானது.
குற்றச்செயல்கள் நடந்தால், அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். நாங்கள் ஓட்டுப் பிச்சை கேட்கிறோம் என்றால், நீங்கள் என்ன கேட்கிறீர்கள். தானம் செய்யுங்கள் காணிக்கை கேட்கிறீர்களா? மயிலாடுதுறை இரட்டை கொலைக்கு முன் விரோதமே காரணம் என போலீசார் கூறுவது வேதனையளிக்கிறது. எப்படியாவது இந்த அரசை பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}