மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

Nov 22, 2024,06:56 PM IST

சென்னை: தவெக மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார். என் மகன் மேடையில் பேசியதை பார்த்து என்னை அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன் என்று தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து தற்போது தவெக தலைவராக மாறி அரசியல் அரங்கை கலங்கடித்து வருவதற்கு  முக்கிய காரணமாக இருந்தது விஜய் நடத்திய மாநாடும், அதில் அவர் பேசிய பேச்சும் என்றே சொல்லலாம். விக்கிரவாண்டி மாநாட்டில் தொண்டர்கள் மத்தியில் 45 நிமிடங்கள் உரையாற்றினார் விஜய். அப்போது திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். 




விஜய்யின் ஆக்ரோஷ பேச்சைப் பார்த்து தொண்டர்களே மிரண்டு விட்டனர். உற்சாகத்தில் மிதந்தனர். சாப்ட்டாக பேசக் கூடியவர் என்று நினைத்திருந்த விஜய் அதிரடியாக பேசியது அவர்களை ஆச்சரியப்படுத்தி விட்டது. அந்த அளவிற்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விஜய்யின் பேச்சு இருந்தது. மாநாடு முடிந்து பல நாட்கள் ஆன பின்னரும் இன்று வரை அவர் பேசிய பேச்சு குறித்து விவாதங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் விஜய் பேச்சு குறித்து அவரவர் கருத்துக்களை இன்றளவும் பதிவு செய்து வருகின்றனர்.


இந்நிலையில், விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் மாநாட்டில் பேசியதை பார்த்து பிரமித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு பேட்டியின்போது கூறுகையில், மாநாட்டில் என் மகன் கலக்கிவிட்டார். அவர் இப்படி பேசுவார் என நான் நினைக்கவே இல்லை. அரண்டு மிரண்டு போயிட்டேன். என் மகனின் வேகத்தை அன்று தான் பார்த்தேன். 


சினிமாவில் நடிப்பார் எனக்கு தெரியும். ஆனால் மேடையில், இப்படி பேசுவார் என்று நினைக்கவில்லை. முதலில் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தேன். பின்பு என்னையும் அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன். மனதிற்குள் இருக்கும் வேகம், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் என அனைத்தும் சேர்ந்து தான் அப்படி விஜய் பேச வைத்தது  என்று நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார் சந்திரசேகர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்