சென்னை: சஞ்சய் தத் லியோ படத்தில் தனக்கு பெரிய ரோல் கொடுக்காதது பற்றி பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
சஞ்சய் தத் சமீபத்தில் KD - The Devil டீசர் வெளியீட்டு விழாவில், லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் தனக்கு பெரிய ரோல் கொடுக்காததால் கோபமாக இருப்பதாக நகைச்சுவையாக கூறினார். இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சஞ்சய் சார் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு போன் செய்தார். நான் ஒரு ஃபன்னியான கமெண்ட் செஞ்சேன். ஆனா அதை கட் பண்ணி சோசியல் மீடியால போட்டதுக்கு அப்புறம் அது கொஞ்சம் awkward ஆகிடுச்சு'னு சொன்னார். நான் பரவாயில்லை சார்னு சொன்னேன்.

நான் ஒரு ஜீனியஸ் இல்ல. பெரிய பிலிம் மேக்கரும் இல்ல. மற்ற கேரக்டர்களை overshadow பண்ற மாதிரி ஸ்டோரி எழுத எனக்கு தெரியாது. என் படங்களில் நிறைய தப்பு செஞ்சிருக்கேன். இன்னும் கத்துக்கிட்டு தான் இருக்கேன். சஞ்சய் தத்துக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பேன். அதுல சரியா பண்ணிடுவேன் என்று லோகேஷ் கூறினார்.
லியோ திரைப்படம் A History of Violence என்ற ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷனாக இருந்தது. சஞ்சய் தத் லியோ படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். இருப்பினும், விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவத்தை அவர் பாராட்டினார். "நான் தளபதி விஜய்யுடன் வேலை செய்தேன். அவருடன் வேலை செய்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா லோகேஷ் என் ரோலை சரியா பயன்படுத்தல. அதனால அவர் மேல எனக்கு கோபம்" என்று சஞ்சய் தத் கூறினார்.
கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா அக்கினேனி, உபேந்திரா ராவ், ஸ்ருதி ஹாசன் மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், அமீர்கான் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}