தரம்சலா: நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
20 ஆண்டுகளில் ஐசிசி போட்டித் தொடர் ஒன்றில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்துவது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் இதை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா இதுவரை தான் ஆடிய 5 போட்டிகளிலும் வென்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் முகம்மது ஷமி அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை விழ்த்தி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். மறுபக்கம் விராட் கோலி சேஸிங்கில் புகுந்து விளையாடி 95 ரன்களைக் குவித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

தரம்சலாவில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 273 ரன்களைக் குவித்தது. முகம்மது ஷமி 5 விக்கெட் வீழ்த்திய நிலையில் குல்தீப் யாதவ் 2 விக்கெட் எடுத்தார்.
பின்னர் சேஸிங்கைத் தொடங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து 71 ரன்களைக் குவித்துக் கொடுத்தனர். ரோஹித் சர்மா 40 பந்துகளில் 46 ரன்களைக் குவிக்க, மறுபக்கம் சுப்மன் கிள் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களம் இறங்கிய விராட் கோலி பிரமாதமாக ஆடினார். 104 பந்துகளைச் சந்தித்த விராட் கோலி 95 ரன்களைக் குவித்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினர். இன்று விராட் கோலி சதம் அடித்திருந்தால் அது அவருக்கு 49வது சர்வதேச சதமாக அமைந்திருக்கும்.
ஷிரேயாஸ் ஐயர் 33 ரன்களை விளாச, கே.எல். ராகுல் 27 ரன்களை எடுக்க, கடைசியில் ரவீந்திர ஜடேஜா 39 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். இன்றைய போட்டியில் இந்தியா அருமையாக சேஸிங் செய்தது. பந்து வீச்சில் குல்தீப் யாதவ் சற்று ரன்களை வாரிக் கொடுத்து விட்டாலும் கூட கடைசி நேரத்தில் 2 விக்கெட்களை வீழ்த்தி, நியூசிலாந்து பெரியஸ்கோரை எட்டி விடாமல் தடுக்க உதவினார். சேஸிங்கில் இந்திய வீரர்கள் ஒவ்வொருவராக பொறுப்பை உணந்து ஆடியதால் இந்தியா அபாரமாக வெல்ல முடிந்தது.
நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
{{comments.comment}}