டெல்லி: இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஆடும்போது காவி நிற யூனிபார்ம் அணிந்து ஆடலாம் என்று செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இதை கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. நேற்று சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா அபாரமாக பீல்டிங் மற்றும் சேசிங் செய்து வெற்றி பெற்று அசத்தியது.
இந்த நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை ரசிக்க ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணி காவி நிற சீருடை அணிந்து விளையாடப் போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கெளரவ பொருளாளர் ஆசிஷ் ஷெலர் மறுத்துள்ளார்
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற செய்திகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம். அப்படி எந்தத் திடடமும் எங்களிடம் இல்லை. இவை அடிப்படையே இல்லாத கற்பனைச் செய்தியாகும். இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டிகளில் முழுமையாக நீல நிற உடையில்தான் பங்கேற்கும் என்றார் அவர்.
அதேசமயம், கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்திய அணி மாற்று சீருடை அணிந்து விளையாடியது. வழக்கமான நீல நிற உடைக்குப் பதில் கரு நீல நிற சீருடையில், சட்டை ஓரத்தில் ஆரஞ்சு (காவி) நிற பட்டையுடனான சீருடை அணிந்து இந்தியா விளையாடியது என்பது நினைவிருக்கலாம்.
தற்போது இந்திய அணியின் போட்டியில் பங்கேற்காத சமயங்களில் பயன்படுத்தும் சீருடை காவி நிறத்தில்தான் உள்ளது. இது சர்ச்சையைக் கிளப்பியது. இந்த சீருடை நிறத்தை மாற்ற வேண்டும். எப்போதும் போல நீல நிற உடையில் இந்திய அணி காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது என்பது நினைவிருக்கலாம்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}