முதல் முறையாக.. நம்பர் 1 இடத்தைப் பிடித்த ஷாஹித் அப்ரிடி மருமகன்.. பவுலிங்கில்!

Nov 01, 2023,04:48 PM IST

துபாய்: முன்னாள் பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாஹித் அப்ரிடியின் மருமகனும், தற்போதைய பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளருமான ஷாஹின் அப்ரிடி, ஐசிசி பந்து வீச்சு தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். அவரது கெரியரில் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.


நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் சூப்பர் பார்மில் இருப்பவர் ஷாஹின் அப்ரிடி. தற்போது வெளியாகியுள்ள ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி பந்து வீச்சு தரவரிசையில், ஷாஹின் அப்ரிடி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.


நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஷாஹின் அப்ரிடியும், ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்  ஆடம் ஜம்பாவும் ஆளுக்கு 16 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின், வங்கதேசத்துக்கு எதிரான முக்கியப் போட்டியில் அதிரடியாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் பாகிஸ்தானின் அரை இறுதிப் போட்டி கனவு இன்னும் உயிருடன் உள்ளது.




2வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹாசல்வுட், 3வது இடத்தில் இந்தியாவின் முகம்மது சிராஜ், 4வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் ஆகியோர் உள்ளனர்.  இந்தியாவின் குல்தீப் யாதவ் 7வது இடத்தில் இருக்கிறார்.


பேட்டிங் வரிசையில் பாகிஸ்தானே முதலிடத்தில் இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசம் முதலிடத்தில் நீடிக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்